தேன் ஒரு உன்னதமான உணவு,அதைவிட நிகரில்லா மருந்து,மேலும் மற்ற மருந்துகளை தேனில் கலந்து தரும் பழக்கம் நீண்ட காலமாக உள்ளது,இதற்க்கு முக்கிய காரணம் தேன் முழுமையாக எளிதில் உடனடியாக ஜீரணமாகி இரத்தத்தில் கலந்து உடலில் கலந்துவிடும்.தேனை மட்டும் தான் எப்போது வேண்டுமானலும் சாப்பிடலாம்,ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும்.
நமது நாக்கின் நூனி பகுதியில் தேனை தடவ
அதுவே இரத்தத்தில் கலந்து நமக்கு ஆற்றலை தரும்.
தேனை செரிமானம் செய்யா இன்சுலின் தேவை
இல்லை,
குடல் நோய் பாதிப்பு உள்ளவர்கள் நீரில்
தேன் கலந்து மெதுவாக உமிழ்நீருடன் கலந்து அருந்த சிறந்த பலனை உடனடியாக கொடுக்கும்.
சுத்தமான தேனை நாம் அனுபவதின் மூலமாக
தான் சுவைத்து உணர இயலும்.தேனை ஒரு கிளாசு நீரில் சிறிதளவு விட்டால் கரையாமல்
அடியில் போய் நிற்க்கும் என்பது உண்மையல்ல,இதே போல் பேப்பரில் தேன் விட்டால்
உறிஞ்சாது என்ற கூற்றும் உண்மை அல்ல.காரணம்தேனை மனிதன் சமைத்து தருவதில்லை,தேனிக்கள்
பல்வேறு வகையான தாவரங்களில் உள்ள பூக்களில் இருந்து பல்வேறு காலநிலைகளில் இனிப்பு
தன்மை உள்ள திரவத்தை எடுத்து அதை தேனாக மாற்றம் செய்து கொடுக்கிறது.பொதுவாக வெயில்
காலங்களில் கிடைக்கும் தேன் சற்று கெட்டி தன்மையாக இருக்க
வாய்ப்புகள்அதிகம்,காரணம் ,பூக்களில் உள்ள இனிப்பு திரவத்தில் நீர் தன்மை குறைவாக
இருக்கும்,இதுவேகாலநிலைமாறமாற இனிப்பு திரவத்தில் நீர் தன்மை கூடி கொண்டே
போகும்.கூடுகளில் தேனில் இருக்கும் நீர் கால நிலை பொருத்து ஆவியாதல் கூட குறைய
இருக்கும்.இதனால் தான் நீரை விட சற்று கெட்டியான தேனும், ஜாம் போன்ற
தேனும்,எண்ணைய்பதத்தில்தேனும் கிடைக்கும்.
இதேபோல்,தேன் ஏறக்குறைய அறுசுவைகளிலும்
பல நிறங்களில் இருக்கும்.எடுத்துக்காட்டாக நாவல் மரம்,அத்தி,ஆலமரம் அதிகம் உள்ள
இடங்களில் எடுக்கும் தேன் அதிக துவர்ப்புடன் கூடிய இனிப்பாக
இருக்கும்.மலைவேம்பு,எள்,வேம்புஇவைகள் அதிகம் உள்ள பகுதியில் கிடைக்கும் தேன் அதிக கசப்புடன் கூடிய இனிப்பாக
இருக்கும்.நெல்,எலுமிச்சை,நெல்லிஇவைகள் அதிகம் உள்ள பகுதியில் கிடைக்கும்
தேன் அதிக புளிப்புடன் கூடிய இனிப்பாக
இருக்கும்.மிளகு,காப்பி,இவைகள் அதிகம் உள்ள பகுதியில் கிடைக்கும் தேன் அதிக கார்ப்புடன்(காரம்) கூடிய இனிப்பாக
இருக்கும்.முக்கனிகள் மற்றும் இனிப்பு சுவை தரும் மரங்கள் அதிகம் உள்ள பகுதியில்
கிடைக்கும் தேன் அதிக இனிப்பாக இருக்கும்.உவர்ப்பு சுவை உடைய தேனை இதுவரை
சுவைத்தது இல்லை.
இதேபோல்நிறம்,மணம் கூட மாறுபடும்.
பொதுவாக தேனும் ஒரு குறிப்பிட்ட
காலத்தில் படிப்படியாக தொடர்ச்சியாகவும் மெதுவாகவும் சர்க்கரை(கற்கண்டு) போல
படியும்,இதனை அப்படியே
எடுத்துப் பயன்படுத்தலாம்,சுவை அதிகமாக தான் இருக்கும்,உலர்ந்தும்,படிகமாகியும்,வெள்ளை நிறமாக மாறுவது இயற்கையானது,
காரணம் தேன் என்பதே ஒரு அடர்த்தியான சர்க்கரை திரவம்தான் அதாவது 70 சதவீதம்
சர்க்கரையும் 30 சதவீதம் நீரும் சேர்ந்த கலவை தான்,குறிப்பிட்ட காலத்தில் இந்த
இரண்டும் தனிதனியா பிரிந்து விடவேண்டும் இது இயற்கையின் நியதியும்
கூட..(எ.கா:சுண்ணாம்பும்,நீரும் கலந்த கலவை தெளிவது,பெயிட்கலவையில் மேலே நீர்மமும்
கீழே வேதியியல் கலவையும் படிவது).தேன் கட்டியாவது,அல்லது உறைவது அல்லது படிகமாக
மாற்றம் அடைய (ஒரு மாதம் முதல் இரண்டு வருடம் வரை காலம் எடுக்கும்)காரணம் அதில்
உள்ள குளுக்கோஸ்(சர்க்கரை மூலக்கூறு) தான். நாம் உடனடியாக அது கலப்பட தேன் என்று
முடிவுக்கு வந்துவிட கூடாது,விரைவில் படிகமாக மாற வெப்பநிலை ஒரு காரணமாக உள்ளது 10
டிகிரிசெல்சியஸ் கீழ் இருந்தால் தாமதம் ஆகும்,10 டிகிரி முதல் 21 டிகிரிசெல்சியஸ்
வரை வெப்பநிலையில் விரைவாக படிகமாகமாறும்.21 டிகிரிசெல்சியஸ் வெப்ப நிலைக்கு மேல்
செல்ல செல்ல படிகமாவது தாமதமாகும் ஆனால் தேனின் உயிர் சத்துக்கள் அழிய தொடங்கும்.
இந்த 70 சதவீதசர்க்கரையில் 30 முதல் 45
சதவீதம் ப்ரக்டோஸ்சும், 25 முதல் 40 சதவீதம் குளுக்கோஸ்சும் உள்ளது. மீதம் உள்ள 30
சதவீதம் நீரில் தான்,பூக்களின் 300 க்கும்மேல்பட்டசத்துகள்,குணங்கள்,மணங்கள்
அடங்கி உள்ளது.இந்தகுளுக்கோஸ், ப்ரக்டோஸ் என்பது சர்க்கரையின் வகைகள்
ஆகும்.ப்ரக்டோஸ் ஆனது குளுக்கோஸை விட மிகவும் அதிக இனிப்பு தன்மை கொண்டது,எனவே
தேனில் அதிகமாக இனிப்பு தன்மை இருந்தால் அதில் ப்ரக்டோஸ் அதிக அளவு உள்ளது என்றும்
குளுக்கோஸ் குறைந்த அளவு உள்ளது என்றும் பொருள், தேனில் இனிப்பு தன்மை குறைவாக
இருந்தால் அதில் குளுக்கோஸ் அதிக அளவு உள்ளது என்றும் குறைந்த அளவு ப்ரக்டோஸ்
குறைந்த அளவு உள்ளது என்றும் பொருள்.
ப்ரக்டோஸ் நீரில் அதிக அளவு கரையும்
எனவே ப்ரக்டோஸ் அதிகம் உள்ள தேன் படிகமானால்தேனின்நிறத்திலே சேறு போல அடர்த்தி
இல்லாமல் படிவமாகும். குளுக்கோஸ் நீரில் அந்த அளவு கரையாது எனவே குளுக்கோஸ் அதிகம்
உள்ள தேன் படிகமாகும்போது,சிறிய சிறிய கற்கண்டு போல் வெள்ளை நிறத்தில் குருனை போல்
படிகமாகும்.
இந்த மாதிரி தேன்
கட்டியாவது,அல்லதுஉறைவது அல்லது படிகமாக மாற்றம் அடையாமல் நீண்ட காலம் இருக்ககூடிய
தேன் வகைகள் உண்டு,அவை காலம் செல்ல செல்ல இறுகி நிற மாற்றம் அடைந்து விடும்.
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி இயற்கை அங்காடி
9486072414(Whatsup, telegram)
சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு
பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும்
பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக