இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 மே, 2021

காட்டுரோஜா (மலை) ரோஜா குல்கந்து

ரோஜா குல்கந்தில் அடங்கி உள்ள பொருள்கள்

 காட்டுரோஜா அல்லது மலை ரோஜா இதழ்.

சல்லி தேன் ,அல்லது கட்டியானவிளைந்த்தேன்,பனங்கற்கண்டு

கசகசா,சார பருப்பு,

வெள்ளரி விதை,உலர்திராட்சை,பாதம்,முந்திரி,பிஸ்தாபருப்பு.

 


செய்முறை:

 பச்சை ரோஜாஇதழ்களை சுத்தமாக அலசி நீர் போகும் வரை உலரவைக்கவும் ,காயவைக்க கூடாது.

 இதனுடன் இரண்டு பங்கு கட்டியான தேன் அல்லது சல்லி தேன் இவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் இட்டு வாய்பகுதியை வெள்ளை துணி வைத்து கட்ட வேண்டும்.பிறகு இதனை சூரியன் உதித்த 2 மணி நேரம் கழித்து  வெயிலில் வைக்க வேண்டும் பிறகு சூரியன் மறைய 1 மணி நேரம் முன்பு எடுத்து வைக்கவும். இதேபோல் 21 நாட்கள் செய்யவும் பிறகு மீதம் உள்ள உலர்ந்த பொருள்களை நமது தேவைக்கு அல்லது விரும்பம் போல் போட்டு மறுபடியும் 7 நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும்.

 

இதுவே கற்கண்டு பயன்படுத்தி செய்யும் முறையில் ஒரு பங்கு இதழுக்கு ஒன்றை பங்கு கற்கண்டை பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்து வாயை வெள்ளைதுணியல் கட்டி வெயிலில் வைக்கவேண்டும்

 


மாலையில் தினமும் கிளரி விட வேண்டும் ,இதழில் உள்ள நீர் வெளியேறி காய்ந்த பக்குவம் வரும் வரை வெயில் வைத்து இருக்க வேண்டும். பிறகு இதனுடன் இதன் அளவில் ஒரு பங்கு தேனை ஊற்றி இரண்டு நாட்கள் வெயிலில்காயவைத்து எடுத்த பின் மேல்கூறிய உலர் பொருள்களை போட்டு வைத்தால் குல்கந்து தயார் இருக்கும்

 

 ரோஜா குல்கந்து நன்மைகள்

(இணையதளத்தில் எடுத்து எழுதப்பட்டது)

 ரோஜா இதழ்கள் கொண்டு செய்யப்படும் குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமானஅமிலங்களின் சம நிலையை சீர் செய்கிற சக்தி அதிகம் உள்ளது. இது செரிமானம் நடக்க மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் உங்கள் பசியை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் குறைய இது ஒரு சிறந்த மருந்து ஆகும். கர்ப்பிணிப்பெண்ணுகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா குல்கந்தை எக்காலத்திலும் சாப்பிடலாம்.

 மேலும்

உடல் துர்நாற்றம் அகற்றும்,

வாய்ப்புண் குறைக்க உதவுகிறது,

உடல் உஷ்ணத்தை குறைக்கும்,

இளமை தோற்றம் அளிக்கும்,

மாதவிடாய் சீராகும்,

செரிமானம் சிறப்பாக செயல்பட உதவும்.

 

தேவைப்படுவோர்அணுகவும்

 சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)


 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

 

   பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக