இந்த மூலிகையானது நல்ல நீர் வளம் உள்ள
அனைத்து இடங்களிலும் வளரும் தன்மை கொண்ட தாவரம் ஆகும்,எளிய முறையில் பெருக்கம்
அடையும் ஒரு தாவரம் ஆகும்,பொதுவாக இந்த தாவரத்தின் கிளைகளை வெட்டி வைத்தாலே வளரும்
தன்மை கொண்ட எளிமையான தாவரம் ,விதைகள் மூலமாகவும் வளர்க்கலாம் ,தினமும் ஈரப்பதம்
இருப்பது அவசியம் ,தொட்டி செடியாகவோ அல்லது குறைந்த இடதிலோ இதை வளர்க்கலாம்,தற்போது
எல்லா நர்சரிகளிளும் பூனைமீசை மூலிகை கிடைக்கும் ,ஒரு செடி மற்றும் கிடைத்தால்
போதும் ,அதன் மூலம் ஏகப்பட்ட செடிகள் உருவாக்கலாம்.
பூனை மீசை செடியின் அறிவியல் பெயர்-Orthosiphon aristatus ,இதை ஜாவா டீ என்றும் ,சீரக துளசி என்றும் அழைப்பர் ,இந்த
மூலிகை துளசி இனத்தை சார்ந்த ஒன்றுதான்.
இந்த மூலிகையின் இலை,தண்டு,வேர்,விதை என
அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்து,பச்சையாகவோ அல்லது காய்ந்த நிலையில்லோ
உபயோகப்படுத்தலாம்...
நாங்கள் பல நபர்களுக்கு கொடுத்து பார்த்து
பலன்களை கீழே கொடுத்துள்ளோம்...நீங்களும் இந்த மூலிகை செடியை வளர்த்து பயன்
பெறுங்கள்..
பித்தபையில்
கல் மற்றும் நோய் தொற்று இருந்தவர்களுக்கு நான் 4 நபர்களுக்கும் மற்றும் என்னுடைய நண்பர் அவருடைய நண்பருக்கும்
கொடுத்து பார்த்தோம் ,எளிமையாக அதே சமயத்தில் பரிபூரணமாக குணம் கிடைத்தது.இந்த
பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் . 250 மில்லி நீரில் 20
கிராம் மூலிகையை போட்டு நன்றாக(5 நிமிடம்) கொதிக்க வைத்து ஆற வைத்து இளம் சூடாக
அருந்த சொன்னோம்.
நீண்ட வருடங்களாக சர்க்கரை நோயாளும் ,இதன்
காரணமாக வரும் பிறப்பு உறுப்பில் வரும் புண்,எரிச்சல்,கல்லிரல் கொழுப்பு (ப்பேட்டி
லிவர்),செரிமான கோளாறு,மலசிக்கல் மேலும் ஆங்கில மருந்துகளின் பக்கவிளைவுகளை
உடனடியாக சரி செய்கிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை
வீதம்.200 மில்லி நீரில் 10 கிராம் மூலிகையை போட்டு நன்றாக (5 நிமிடம்) கொதிக்க
வைத்து ஆற வைத்து இளம் சூடாக அருந்த சொன்னோம்.
உயர் ரத்த அழுத்த பாதிப்புகள்
உள்ளவர்களுக்கு இந்த மூலிகையை கொடுத்து சோதனை செய்ததில் 5 வாரங்களுக்குள்
கட்டுக்குள் வந்துவிடுகிறது, இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு
வேளை வீதம்.200 மில்லி நீரில் 10 கிராம் மூலிகையை போட்டு நன்றாக (5 நிமிடம்)
கொதிக்க வைத்து ஆற வைத்து இளம் சூடாக அருந்த சொன்னோம்.
சிறுநீரக கோளாறுகளான எரிச்சல் ,புண் ,கல்
,நீர் கட்டி போன்ற பிரச்சனைகளை உடனடியாக
சரி செய்கின்றது,மேலும் கிரியோடீன்,யூரியா போன்றவை அதிகமாக இரத்ததில் கலந்து
இருப்பவர்களுக்கு கொடுத்ததில் படிப்படியான முன்னேற்றமே கிடைத்தது.... இந்த
பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் . 250 மில்லி நீரில் ஒரு
கைப்பிடி மூலிகையை போட்டு நன்றாக(5
நிமிடம்) கொதிக்க வைத்து ஆற வைத்து இளம் சூடாக அருந்த சொன்னோம்.
ஆங்கில மருந்து,மது,புகை,தேவையற்ற நச்சு
உணவுகள் காரணமாக இரத்தம் அசுத்தமாக உள்ள நபர்களுக்கு கொடுத்து சோதனை செய்ததில்
இந்த மூலிகை அதிகப்படியான சிறுநீர் போக்கின் மூலமாக நச்சு கழிவுகளை உடலில் இருந்து
வெளியற்றுகிறது ,உடலை நன்கு புத்துணர்ச்சியுடன் இயங்க வைக்கிறது இந்த பாதிப்பு
உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் .150 மில்லி நீரில் 10 கிராம்
மூலிகையை போட்டு நன்றாக(5 நிமிடம்) கொதிக்க வைத்து ஆற வைத்து இளம் சூடாக அருந்த
சொன்னோம்.
மேலும் இந்த மூலிகை உடலில் உள்ள கெட்ட
கொழுப்புகளை கரைத்து,நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யவும்,உடல் எடையை குறைக்கவும்
மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது, தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை
இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல்
எடை குறைக்க உதவுகிறது .இதை பல நண்பர்களுக்கு கொடுத்து சோதனை செய்து
வருகிறோம்,நல்ல முன்னேற்றம் கிடைத்து கொண்டு இருக்கிறது,இன்னும் முழு குணம்
கிடைக்கவில்லை ,
மாறிவரும் உணவு பழக்கம்,மேலும் தற்போது நமக்கு கிடைக்கும்
அனைத்து உணவு பொருள்களிலும் அதிகப்படியான உப்புகள் ,ரசாயனங்கள் கலந்துதான்
வருகின்றது,என்னதான் நாம் ஆரோக்யமாக உணவுகள் எடுக்கின்றோம் என்று நினைத்து கொண்டு
இருந்தாலும் உடல் படிப்படியாக செயல் இழக்க தொடங்குகிறது...நாம் இந்த கழிவுகளை
அவ்வப்போது வெளியற்றினால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும், எனவே பிரச்னை
உள்ளவர்கள் மட்டும் தான் இந்த மூலிகை கசாயம் அருந்த வேண்டும் என்பதில்லை ,வழக்கமாக
டீ,காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் இதற்கு பதிலாக இந்த கசாயத்துடன் பனை வெல்லம்
அல்லது கரும்பு வெல்லம் ஏதேனும் ஒன்றை கலந்து இளம் சூடாக அருந்தலாம்.இப்படி
செய்வதன் மூலம் தேவை இல்லாத நச்சு கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேற செய்கின்றது.
இந்த மூலிகையை டீ ஆகா செய்து பயன்படுத்த விரும்பினால் 150
மில்லி நீரில் 5 கிராம் பொடியை போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி,பனை வெல்லம்
அல்லது வெல்லம் சேர்த்து அருந்தலாம் .
முடிந்த அளவு இயற்கை வழியில் விளைந்த உணவு பொருள்களை எடுத்தும்
,தேவை இல்லாத உணவு பழக்கம்,மது ,புகை ,புகையிலை பழக்கம் இவற்றை கைவிட்டும்
வாழ்ந்தாலே எந்த விதமான நோய்களும் நம்மை அணுகாது,அப்படி வந்தாலும் உடனடியாக
விலகிவிடும்
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
முழுகுணம் கிடைக்க குடல் வாழ் நுண்ணுயிர்களை ஆதரிக்க வேண்டும். நீராகாரம், மற்றும் புளித்த தயிர் அருந்த வேண்டும் - அதிகாலையில், வெறும் வயிற்றில். அல்லது PROBIOTIC சாப்பிட வேண்டும். குடல் பாதிக்கப் பட்டதால்தான், முழுக்குணம் பெற முடியவில்லை.
பதிலளிநீக்குஇந்த பூனை மீசை சூரணம் தங்களிடம் கிடைக்குமா.. 100கி எவ்வளவு ரூபாய் ? தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள்.7639198965 எனது கைபேசி
பதிலளிநீக்குஇந்த பூனை மீசை சூரணம் தங்களிடம் கிடைக்குமா.. 100கி எவ்வளவு ரூபாய் ? தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள்.0779737137 எனது கைபேசி
பதிலளிநீக்குGive your address please
பதிலளிநீக்குI need this plant
பதிலளிநீக்கு9788608608
Which part of the plant in above description is powdered to make tea.
பதிலளிநீக்குPlease send me details regarding availability of seeds/Leaves etc .
பதிலளிநீக்குDetails please
R kumar 8903722112 kayathar
பதிலளிநீக்குI want this plant
பதிலளிநீக்குGo to nearby Nursery garden
நீக்குமருத்துவம் எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்? நல்ல குணமடைய நாட்கள் எத்தனை ஆகும்.
பதிலளிநீக்கு