இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மே, 2021

பாரம்பரிய விளக்கெண்ணெய் தயாரிக்கப்படும் முறை-1

 


 விளக்கெண்ணெய் தயாரிக்கப்படும் முறை:.நன்றாக முற்றிய ஆமணக்கு விதைகளைவெயிலில்உலர்த்தி அவற்றின் மேல் தோலை நீக்கி அல்லது அப்படியே இளம் வறுப்பகா வறுத்து அவற்றை உரலில் இட்டு நன்கு இடிக்கவேண்டும். அது கிட்டத்தட்ட பசை போல இருக்கும். பின்னர் பானை ஒன்றில் ஒரு பங்கு விதைக்குநாங்கு பங்கு தண்ணீர் அல்லது விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த நீரில் இடித்துவைத்துள்ளஆமணக்கைக்கொட்டிக்கிளர வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் மிதக்கும். அதனைச் சிறிது சிறிதாகக் கரண்டியால் எடுத்து வேறு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். சேகரித்தஎண்ணெயுடன் சிறிய அளவில் நீர்த்துளிகள் கலந்து இருக்கும். எனவே எண்ணெயைவாணலியில்விட்டுச் சூடாக்க வேண்டும். சலசல என்ற சத்தத்துடன் நீர் மெல்லமெல்லவற்றும். நீர் முழுவதுமாக வற்றிபின் சத்தம் அடங்கிவிடும். இப்போது எண்ணெயை ஆற வைத்து வடிகட்டி  எடுப்பது நாம் பாட்டி காலத்துமுறை.காரணம் இதன் விதைகளில்ரெசின் என்ற நச்சு தன்மை உள்ளது அதை நீக்கவெ மேலெ காணும் செய்முறை.

 எண்ணைய் தயாரிக்க பயன்படுத்த வேண்டிய பாத்திரங்கள்:ஈயம்,செம்பு,பித்தளை,மண் பாத்திரம்

எண்ணைய் தயாரிக்க பயன்படுத்த கூடாத பாத்திரங்கள்:அலுமினியம்,பிளாஸ்டிக்

எண்னைய் சேகரித்து வைக்க வேண்டிய பாத்திரங்கள்:கண்ணாடி,காரணம்எண்னெய்யின்தன்மையைமாற்றாது.

 உடலில் எந்த பகுதியில் வீக்கம் இருந்தாலுமதை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

 பருப்பு எளிமையாக வேக மற்றும் செரிமானம் சிறப்பாக நடக்க காலம் காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்

 அடிபட்ட புண்களைஆற்றவும், பல்வேறு நரம்பு மூட்டுவலிகளுக்கானமூலிகைத் தைலம் காய்ச்சவும் அதன் அடிப்படைத்தைலமாகப் பயன்படுகிறது

 தலைமுடிக்குஅடிக்கடிப் பயன்படுத்தி வந்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக  இருக்கும்.மேலும் பொடுகு தொல்லை குணமாகும்.

 பருப்பைஅரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவரகட்டிகள்உடையும் அல்லது அப்படியே அமுங்கும்.

 சுகபேதிக்கு நாம் பலதலைமுறைகளாக பயன்படுத்தி வந்தது விளக்கெண்ணெய் தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

 உடலுக்கு சூட்டை நீக்கி குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத்தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ, நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில்விளக்கெண்ணெயைத்தடவிக்கொண்டுஉறங்குவர். சூட்டினால் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத்தடவுவர்.

  குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்குவிளக்கெண்ணெயைசூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.

 கண்கள் சிவந்திருந்தால், மங்களான பார்வைக்கு சுத்தமான விளக்கெண்ணெய் ஒரு துளியைஇரவில் கண்களில் விட்டு உறங்க குணம் கிடைக்கும்

 விளக்கெண்ணெய் உடன் சம அளவு  தேங்காய் எண்ணேய் கலந்து தினமும் தேய்க்க  தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும். 

 

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)


சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

  பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

 Telegram:

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக