இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 மார்ச், 2019

கருங்காலி-பிரபஞ்ச ஆற்றல் வாங்கி தரும் ஒரு வங்கி


தண்டம்:நம்முடைய சித்தர்கள்,ரிசிகள்,ஞானிகள் இவர்கள் கையில் “ Y ”  வடிவ கட்டை ஒன்றை வைத்து இருப்பார்கள்.அதன் மேல் கையை வைத்து கொண்டு அமர்ந்து இருபதையோ அல்லது கையில் பிடித்து இருப்பதையோ நாம் சிலைகளிளும்,பழைய பக்தி திரைபடங்களில் பார்த்து இருப்போம்.இந்த கட்டையை தண்டம் என்று அழைப்பார்கள். இதனை கொண்டு நம் தலையில் வைத்தோ அல்லது நம் உடல் பாகங்கள் மீது வைத்தோ நல்ல வாக்கு (வார்த்தைகள்) கூறி ஆசி தருவார்கள்,இந்த தண்டம் கருங்காலி மரத்தால் செய்யப்பட்டதாகதான் இருக்கும். சில சமயங்களில் ஆசி வழங்கிய பின் தண்டம் உடந்த நிகழ்ச்சிகள் கேள்விபட்டது உண்டு(இரு நிகழ்ச்சிகள்)

மாலை-கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய (சேவு) பகுதியை மணியாக உருண்டை வடிவில் செய்து அதில் செம்பு கம்பி அல்லது பருத்தி நூல் கொண்டு மாலையாக செய்து அணிந்து கொள்வார்கள்,யோகம்,தியானம்,தேவதை வழிபாடு செய்பவர்கள்,மந்திர ஜபம் செய்பவர்கள் அதிகம் கருங்காலி மாலையை அணிந்து கொள்வார்கள்,
பாய்ச்சிகை:பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார்.இந்த பாய்ச்சிகை பெரும்பாழும் கருங்காலி மரத்தால் தான் செய்யப்படும் 
மரப்பாச்சி பொம்மை:பிளாஸ்டிக் பயன்பாடு வருவதற்க்கு முன்பு வரை குழந்தைகளுக்கு விளையாட மரப்பாச்சி பொம்மை தான் தருவார்கள்,அது கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டு இருக்கும்.
கொலு பொம்மைகள்:கொலுவில் வைக்கப்படும் பெரும்பாலான பொம்மைகள் வைரம் பாய்ந்த கருங்காலி மரத்தில் தான் செய்யப்படும்.நீங்கள் கருநிற சாமி பொம்மைகள் அடுத்த முறை கொலுவில் பார்த்தால் புரியும்.தற்போது மர பொம்மைகள் செய்து கருநிற சாயத்தில் ஊற வைத்த பொம்மைகள் கிடைக்கிறது.சிறப்பான கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட பொம்மை எனில் நீரில் மூழ்கும்.
அனைத்து கோயில்களிலும் கும்பாபிசேகத்தின் பொது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள். 
தாயத்துகள்:நரிகுறவர் இன மக்கள் தரும் தாயத்துகள் அனைத்திளும் கருங்காலி கட்டை உறுதியாக இருக்கும் (குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காத்து,கருப்பு,பில்லி,சூனியம்,ஏவல் நிலை அகல,மேலும் நோய் நொடி அண்டாமல் இருக்க என்று கூறி தருவார்கள்)


கருங்காலி மரத்தின் பிசின் (காசு கட்டி)
:பற்களுக்கு வலிவூட்டும், ஈறுகளில் ரத்த கசிவை தடுக்கும்,பற்களுக்கு உறுதிதன்மை கொடுக்கும்,சமீப காலம் வரை வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு உடன் காசுகட்டி எனப்படும் கருங்காலி மர பிசினை பயன்படுத்தி வந்தோம்.
 வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.அது கருப்பு நிறத்தில் இருக்கும்.ஆனால் அதற்க்கு மேல் உள்ள பகுதி இயல்பான நிறத்தில் தான் இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் மனிதனுக்கு நன்மையையும், இதன் தீய கதிர் வீச்சுக்கள் நோய்களையும் உண்டாக்குகிறது. முக்கியமாக, செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு தலை உச்சி முதல் கழுத்து வரையிலும், கண் கோளாறுகள், கண் அழற்சி, வீக்கம், இரத்த வாந்தி, பசியின்மை, தொழுநோய், வெண்குஷ்டம், மூலம், சர்க்கரை நோய், குடல் புழுக்கள், உடல் பலவீனம் போன்ற நோய்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை. எனவே செவ்வாய் பார்வை குறைவாக இருப்பவர்கள் கருகாலி மர பகுதிகளை உடலில் அணிந்து கொண்டால்,செவ்வாயின் நல்ல கதிர்கள் மட்டும் அதிகப்படியாக கருங்காலி மர துண்டுகள் மூலம் ஈர்க்கப்படும் ,இதன் மூலம் பாதிப்புகள் அகலும் என்பது நம்பிக்கை.



கருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், உகந்தது என்றும்,கருங்காலி மரம் இவர்கள் வளர்ப்பதும்,கையில் உடலில் கருங்காலி மர பொருள்களை வைத்து இருப்பதும் உகந்தது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குறி சொல்லும் கோல்:சங்க காலத்தில் குறி சொல்லும் குறவஞ்சி பெண்கள் கருங்காலி மரத்தினால் ஆன கோல் (குச்சி) ஒன்றை கையில் வைத்து இருப்பார்கள்,குறி கேட்க வருபவர்கள் கையில் இந்த கோலை வைத்து அழுத்தி (தொட்டு) தான் குறி சொல்வார்கள்.


உலக்கை:சமிபகாலம் வரை பெண்கள் பூப்பெய்தும் அந்த நாளில் அவங்க அமர்ந்து இருக்கும் இடத்திற்க்கு (பச்சை மட்டையில் கட்டிய குடில்) முன்பு கருங்காலி உலக்கையை போட்டு வைப்ப்பர்கள்.அப்போது பெரும்பான்மையான வீடுகளில் கருங்காலி உலக்கை இருக்கும்.காலம் மாறமாற மற்ற மரத்தால் ஆன உலக்கை அந்த இடத்தை பிடித்தது,கருங்காலி உலக்கை வைக்க காரணம் எந்த ஒரு கெட்ட சக்தி (எதிர்மறை சக்தி) பெண்ணை தாக்காதவாரு இருக்க கருங்காலி மரத்தால் ஆன உலக்கையை வைத்தனர்.சிலர் இரத்த வாடையால் வரும் விலங்குகளை வரவிடாமல் தடுக்கவும்,வந்தால் விரட்டவும்தான் உலக்கையை வைப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.
கோடாலி,கொந்தாளம்,மண்வெட்டி,களைவெட்டி போன்ற இரும்பு ஆய்தங்களுக்கு கைபிடி ஆக கருங்காலி மரம் தான் பயன்பட்டது,காரணம் கருங்காலி மரத்தை எளிதில் கரையான் அரிக்காது,உடைக்க இயாலாது,உடைபடாது,மேலும் அதிர்ச்சி தாங்கியாகவும் இருக்கும்,இதனால் மரம் வெட்டும் கோடாலிகளுக்கு கைப்பிடியாக கருங்காலி மர கம்புகள் தான் பெரும்பாழும் பயன்படுத்துவர்,இதன் காரணமாகதான் அந்த காலத்தில் கூட இருந்து குழி பறிக்கும் நபரை கருங்காலி என்று கூறுவர்.



பொதுவாக தண்டம், மாலை, பாய்ச்சிகை, மரப்பாச்சி பொம்மை, கொலு பொம்மைகள்,கோபுர கலசத்தில் வைப்பது, தாயத்துகள், குறி சொல்லும் கோல், ஜோதிட சாஸ்திரம்,சிறு துண்டுகள் கையில் மற்றும் பூஜை அறையில் வைத்து இருப்பது போன்ற முறையில் கருங்காலி மரத்தை நம்மக்கள் பழங்காலம் தொட்டு உபயோகப்படுத்துவதன் நோக்கம் இது பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும்,அதே வேலையில் (கெட்ட)எதிர் மறை சத்தியை விலக்கி விடும் அல்லது தங்கவிடாது என்பதுதான் இதனுள் பொதிந்துள்ள சூச்சமம்.
இதையே நாம் ஆன்மீக ரீதியாக பார்தோமெயானால்,ஒரு குறிப்பிட்ட ராசி உடையவர்களுக்கும் ,ஒரு நட்சத்திரம் உடையவர்களுக்கும்,ஒவ்வொரு தெய்வத்திற்கும்,நவ கிரகங்களுக்கும் உகந்த விருட்சங்கள் (மரம்) தனித்தனியாக உண்டு.ஆனால் அனைத்து ராசிகாரர்களுக்கும், அனைத்து நட்சத்திரகாரர்களுக்கும்,அனைத்து தெய்வத்திற்கும்,நவ கிரகங்களுக்கும் உகந்த விருட்சங்களில் (மரம்) குறிப்பிடதகுந்த ஒன்று தான் கருங்காலி மரம். எனவே அனைத்து ராசி, அனைத்து நட்சத்திரம்,அனைத்து தெய்வம்,நவ கிரகங்கள் என இவற்றில் இருந்து நல்ல சக்திகளை(passitive Energy) நமக்கு பெற்று தந்து நம்மிடம் இருக்கும் அவைகள் தரும் எதிர்மறை சக்திகளை(negative Energy) களையும் ஆற்றல் கருங்காலி மரத்திற்க்கு உண்டு.

கருங்காலி மரத்தை எப்படி பயன்படுத்தலாம்:
கருங்காலி மர கன்றுகள் வனத்துறை நர்சரிகளில் உறுதியாக கிடைக்கும் மேலும் மற்ற நர்சரிகளில் கிடைக்கும் அல்லது சொல்லி வைத்தால் வாங்கி தருவார்கள்,இந்த கன்றுகளை வாங்கி வீடு,தோட்டம்,பொது இடம்,கோவில் இவற்றில் வைத்து பராமாரிக்கலாம்,
கருங்காலி மரத்தின் வைரம் பாய்ந்த கருநிற கட்டைகளில் சிறு துண்டு எடுத்து பால் மற்றும் நீரில் கழுவி பிறகு அதற்க்கு உரிய பூஜை முறைகள் தெரிந்தால் செய்து பின் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம் அல்லது சுத்தமான ஒரு இடத்தில் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்,கையில் சட்டை பையில் வைக்கலாம். பூஜை முறைகள் தெரியவில்லை என்றால் முழுமனதோடு குலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ ,நவகோள்களையோ வேண்டி 108 முறை அவர்களின் நாமத்தை கூறி வழிபாடு செய்து வைக்கலாம்.

கருங்காலி மரத்தின் வைரம் பாய்ந்த கருநிற கட்டை மற்றும் அதன் பொருள்கள் எங்கு கிடைக்கும்:                                                        
முதலில் மரம் அறுவை ஆலை அல்லது மர குடோன் சென்று விசாரிக்கவும் அங்கு உறுதியாக கிடைக்கும்,அவர்களிடம் இந்தியன் கருகாலி(நாட்டு மரம்) வேண்டும் என்று கேளுங்கள்,இல்லை என்றால் வரும் போது தகவல் தர சொல்லுங்கள்,சதுராஅடி அல்லது எடை கணக்கில் தருவார்கள்.இந்த மரம் வனத்துறையால் காடுகள் மற்றும் மலைகளில் வெட்ட தடை செய்யப்பட்டு உள்ளது,எனவே கவனமாக இருக்கவும்,தவறு செய்யவோ அல்லது தூண்டவோ கூடாது.
நரிகுரவர் இன மக்களிடம் கிடைக்கும்.

கருங்காலி உண்மையா என்று எப்படி கண்டறிவது:                                   கருங்காலி கட்டைகள் நீரில் மூழ்கும்,அதே போல் ருத்ராட்சம் கூட நீரில் மூழ்கும்.இதை வைத்து உண்மை தன்மையை கண்டறியலாம்.

நன்றி:
கொடுக்கபட்டுள்ள தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் வழிப்பாடு செய்பவர்கள்,ஜீவ நாடி படிப்பவர்கள்,ஜோதிடர்கள், நரிகுரவர் இன மக்கள்,பெரியவர்கள்(வயதானவர்) இவர்களிடம் இருந்து கேட்டும்,சில விசயங்கள் நேரடியாக பார்த்தும் எழுதப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Angadi-----      https://www.facebook.com/sathuragiriangadi/

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்-94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com 
........................................................................................


.

3 கருத்துகள்:

  1. அய்யா கருங்காலி மாலை கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  2. ஐயா கருங்காலி உலக்கை கிடைக்குமா

    பதிலளிநீக்கு
  3. கருங்காலி கட்டையை வீட்டில் வைக்கலாமா.அப்படி வைக்கும்போது வழிபாடு ஏதாவது செய்ய வேண்டுமா இல்லை சும்மா வைத்துக் கொல்லலாமா

    பதிலளிநீக்கு