இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 ஜூலை, 2020

கருங்காலி மணி மாலை

கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய (சேவு) பகுதியை மணியாக உருண்டை வடிவில் செய்து அதில் செம்பு கம்பி அல்லது பருத்தி நூல் கொண்டு மாலையாக செய்து அணிந்து கொள்வார்கள்,யோகம்,தியானம்,தேவதை வழிபாடு செய்பவர்கள்,மந்திர ஜபம் செய்பவர்கள் அதிகம் கருங்காலி மாலையை அணிந்து கொள்வார்கள்,


பொதுவாக தண்டம், மாலை, பாய்ச்சிகை, மரப்பாச்சி பொம்மை, கொலு பொம்மைகள்,கோபுரகலசத்தில்வைப்பது, தாயத்துகள், குறி சொல்லும் கோல், ஜோதிடசாஸ்திரம்,சிறுதுண்டுகள் கையில் மற்றும் பூஜை அறையில் வைத்து இருப்பது போன்ற முறையில் கருங்காலி மரத்தை நம்மக்கள் பழங்காலம் தொட்டு உபயோகப்படுத்துவதன் நோக்கம் இது பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளைதன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும்,அதே வேலையில் (கெட்ட)எதிர் மறை சத்தியை விலக்கி விடும் அல்லது தங்கவிடாது என்பதுதான் இதனுள்பொதிந்துள்ளசூச்சமம்.

இதையே நாம் ஆன்மீக ரீதியாக பார்தோமெயானால்,ஒரு குறிப்பிட்ட ராசி உடையவர்களுக்கும் ,ஒரு நட்சத்திரம் உடையவர்களுக்கும்,ஒவ்வொருதெய்வத்திற்கும்,நவகிரகங்களுக்கும் உகந்த விருட்சங்கள் (மரம்) தனித்தனியாக உண்டு.ஆனால் அனைத்து ராசிகாரர்களுக்கும், அனைத்து நட்சத்திரகாரர்களுக்கும்,அனைத்துதெய்வத்திற்கும்,நவகிரகங்களுக்கும் உகந்த விருட்சங்களில் (மரம்) குறிப்பிடதகுந்த ஒன்று தான் கருங்காலி மரம். எனவே அனைத்து ராசி, அனைத்து நட்சத்திரம்,அனைத்துதெய்வம்,நவ கிரகங்கள் என இவற்றில் இருந்து நல்ல சக்திகளை(positive Energy) நமக்கு பெற்று தந்து நம்மிடம் இருக்கும் அவைகள் தரும் எதிர்மறை சக்திகளை(negative Energy) களையும் ஆற்றல் கருங்காலி மரத்திற்க்கு உண்டு.

 

கருங்காலி மரத்தை எப்படி பயன்படுத்தலாம்:கருங்காலி மர கன்றுகள்வனத்துறைநர்சரிகளில் உறுதியாக கிடைக்கும் மேலும் மற்ற நர்சரிகளில் கிடைக்கும் அல்லது சொல்லி வைத்தால் வாங்கி தருவார்கள்,இந்தகன்றுகளை வாங்கி வீடு,தோட்டம்,பொதுஇடம்,கோவில் இவற்றில் வைத்து பராமாரிக்கலாம்,

கருங்காலி மரத்தின் வைரம் பாய்ந்தகருநிறகட்டைகளில் சிறு துண்டு எடுத்து பால் மற்றும் நீரில் கழுவி பிறகு அதற்க்கு உரிய பூஜை முறைகள் தெரிந்தால் செய்து பின் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம் அல்லது சுத்தமான ஒரு இடத்தில் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்,கையில் சட்டை பையில் வைக்கலாம். பூஜை முறைகள் தெரியவில்லை என்றால் முழுமனதோடுகுலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ ,நவகோள்களையோ வேண்டி 108 முறை அவர்களின் நாமத்தை கூறி வழிபாடு செய்து வைக்கலாம்.

 

கருங்காலி மரத்தின் வைரம் பாய்ந்தகருநிற கட்டை மற்றும் அதன் பொருள்கள் எங்கு கிடைக்கும்:                                                                       முதலில் மரம் அறுவை ஆலை அல்லது மர குடோன் சென்று விசாரிக்கவும் அங்கு உறுதியாக கிடைக்கும்,அவர்களிடம் இந்தியன் கருகாலி(நாட்டு மரம்) வேண்டும் என்று கேளுங்கள்,இல்லை என்றால் வரும் போது தகவல் தர சொல்லுங்கள்,சதுராஅடி அல்லது எடை கணக்கில்தருவார்கள்.இந்த மரம் வனத்துறையால் காடுகள் மற்றும் மலைகளில் வெட்ட தடை செய்யப்பட்டு உள்ளது,எனவே கவனமாக இருக்கவும்,தவறுசெய்யவோ அல்லது தூண்டவோ கூடாது.

நரிகுரவர் இன மக்களிடம் கிடைக்கும்.

 

கருங்காலி உண்மையா என்று எப்படி கண்டறிவது:                                    கருங்காலி கட்டைகள் நீரில் மூழ்கும்,அதே போல் ருத்ராட்சம் கூட நீரில் மூழ்கும்.இதை வைத்து உண்மை தன்மையை கண்டறியலாம்.

நன்றி:

கொடுக்கபட்டுள்ளதகவல்கள் அனைத்தும் சித்தர்கள்வழிப்பாடுசெய்பவர்கள்,ஜீவ நாடி படிப்பவர்கள்,ஜோதிடர்கள், நரிகுரவர் இன மக்கள்,பெரியவர்கள்(வயதானவர்) இவர்களிடம் இருந்து கேட்டும்,சிலவிசயங்கள் நேரடியாக பார்த்தும் எழுதப்பட்டது.

 

சதுரகிரி அழகேசன்

9486072414

9659968751

 

பொருள்கள் வாங்க சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

 

Telegram link

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக