தர்ப்பைப் புல் தொன்மையான ஒருவகைத்
தாவரம். இது வளருமிடங்களில் மிதமான குளிச்சியையும் மன அமைதியையும் உணர முடியும்.
`தர்ப்பை, புண்ணிய பூமியைத் தவிர வேறெங்கும்வளராது’ என்பது ஐதீகம். தர்ப்பைப் புல்
வளருமிடங்களில்எண்ணற்றஜீவராசிகள்அடைக்கலமாகியிருப்பதைப் பார்க்கலாம். இந்தப் புல்
வகை, பல்லுயிர்ப்பெருக்கத்தைஊக்குவிக்கக்கூடியது. மழைக் காலத்தில் தண்ணீரில்
மூழ்கியிருந்தாலும்தர்ப்பைஅழுகிப்போவதில்லை என்பது இதன் சிறப்பு. கடும் கோடையிலும்
காய்ந்து போகாது. தர்ப்பைப்புல்லின்மகிமையைப் பற்றி யஜூர், அதர்வணவேதங்களிலும்,
சம்ருதி சிந்தாமணி, சம்ருதிபாஸ்கரம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலும், நிகண்டு
ரத்தினாகரம், ராஜ நிகண்டு போன்ற ஆயுர்வேதநூல்களிலும் குறிப்புகள் உள்ளன. இது
பச்சையாக இருக்கும்போது அதன் மேல் தண்ணீர் ஒட்டாது.
`தர்ப்பையைஅணிந்தவர்களிடம்பாவங்கள்ஒட்டாது’ என்று சாஸ்திரங்கள்கூறுகின்றன.
திருமணம் முதல் இறப்பு வரை இந்து மதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. `யாகங்கள்
செய்யும்போது இதைப்பயன்படுத்தவில்லை என்றால், அந்த யாகமே பயனற்றது’ என்று
யஜூர்வேதத்தில்குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது, `அக்னி கர்ப்பம்’, `புசம்’,
`பவித்ரம்’, `தர்ப்பம்’, `அம்ருத வீரியம்’... எனப்பலப்பெயர்களால்அழைக்கப்படுகிறது.
இதன் சாம்பலைப் பயன்படுத்தி கோயில்களிலிருக்கும் உலோக விக்ரகங்களும்,
பாத்திரங்களும் துலக்கப்படுகின்றன. காரணம், இந்தச்சாம்பலிலிருக்கும்தாமிரஉலோகத்தின்
தன்மை, அவற்றின் பளபளப்பை நீடிக்கச் செய்யும்.
தர்ப்பைப்புல்லில் மருத்துவ குணங்கள்
பல உள்ளன. இதன் ஒரு சில துண்டுகளைகுடிநீர்ப்பானையில் போட்டுவைத்து, அந்த நீரை
அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும். சூரிய, சந்திர கிரகணத்தின்போது
உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்ப்பைப்புல்லைப் போட்டு வைத்தால்
தோஷங்கள்நீங்கும் என்பது ஐதீகம். மேலும், தர்ப்பைப்புல்களின்காற்றுபட்ட இடங்களில்
தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில்கொத்தாகக்
கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை
கொண்டது. குடிநீரில்தர்ப்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரைநோய்
கட்டுக்குள் இருக்கும். உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும்
சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்ப்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி
ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள்நீங்கும். சிறுநீரகம், கல்லீரல்,
குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள்தர்ப்பைப் புல் கொண்டு
காய்ச்சியநீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும். அதோடு, சிறுநீரகக்கற்களையும்வெளியேற்றும்
என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய்,
வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்ப்பைப்புற்களைப்போட்டுவைத்தால் அவை
கெட்டுப்போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும்மணத்தையும்அதிகரிக்கும்.
பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனி பகவான் கோயிலின் தல விருட்சம் தர்ப்பைப் புல்.
அதனாலேயே இங்குள்ள பகவான் `தர்பாரண்யேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
தர்ப்பைப்புல்லால் செய்யப்படும் பாய்
விரிப்பில் படுத்து உறங்கினால்உடல்சூடுதணியும்; மன உளைச்சல் நீங்கும்; நல்ல
உறக்கம் கிடைக்கும்; ஆரோக்கியம் நீடிக்கும். இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட
தர்ப்பைப் புல் இப்போது அருகிவரும்தாவரமாக இருக்கிறது.
மலைக்குன்றுகளின்ஓரங்களிலும், அடர்ந்த காடுகளின்உட்புறத்திலும், சில
நதிக்கரைஓரங்களிலும்தர்ப்பைப்புல்லைக்குறைவாகத்தான் பார்க்க முடிகிறது.
இந்தப் பாயில் படுத்து
உறங்கினால்சர்க்கரைநோய்கட்டுக்குள்ளிருக்கும். தர்ப்பைப்புல்லையும் வெட்டி
வேரையும் கலந்து தண்ணீரில் போட்டு அதை குடித்து வந்தால் கிட்னியில் இருக்கும் கல்
கரையும், உடல்சூடு குறையும்.
தர்ப்பைப்புல்லின்மருத்துவக் குணம்
குறித்து சித்த மருத்துவர் அர்ஜுனனிடம் கேட்டோம். ``தர்ப்பைப் புல் மருத்துவக்
குணம் நிறைந்தது. முக்கியமாக இதில் மனிதன் சுவாசிக்கத் தேவையான பிராணவாயு அதிகமாக
இருக்கிறது. தர்ப்பையில் ஆசனம் அமைத்து அதன்மேல் உட்கார்ந்து தலையில் நீர்
ஊற்றினால் என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்து விடலாம். இதனால்
போதிய அளவு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். எல்லாவிதமான நோய்களும் விலகிச்
சென்றுவிடும். ரத்தத்தில்தேங்கியிருக்கும்கழிவுப்பொருள்கள்அகல்வதுடன்மின்காந்தப்
பாதையில் உள்ள தடைகள்நீங்கும். வாதம், பித்தம், கபம் சுத்திகரிக்கப்படும்.
தானாக வளரும் தர்ப்பையில் பாய் செய்து அதன்மீது
உட்கார்ந்து வருவதால் பல்வேறு நோய்கள்குணமாகும். குறிப்பாக
சிறுநீரக்கற்கள்கரைவதுடன் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
சிறுநீரகக்கோளாறுக்காகடயாலிசிஸ் செய்ய வேண்டிய சூழலில் இருப்பவர்கள்
தர்ப்பையில்அமர்வதன்மூலம்டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.'' என்றார்.
தர்ப்பை, சித்தமருத்துவத்தில்
மட்டுமல்லாமல் யுனானி, ஆயுர்வேதமருத்துவத்திலும்பயன்படுத்தப்படுகிறது..
நன்றி ஆனந்த விகடன்
தேவைப்படுவோர்அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414
9659968751
சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம்
குழு
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக