இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

பூனைமீசை மூலிகை-பித்தபை நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்புகள், சிறுநீரக கோளாறுகள், அதிக உடல் எடை, இரத்தம் அசுத்தம் போன்ற கோளாறுகளை எளிமையாக குணமாக்கும் எளிமையான மூலிகை.

இந்த மூலிகையானது நல்ல நீர் வளம் உள்ள அனைத்து இடங்களிலும் வளரும் தன்மை கொண்ட தாவரம் ஆகும்,எளிய முறையில் பெருக்கம் அடையும் ஒரு தாவரம் ஆகும்,பொதுவாக இந்த தாவரத்தின் கிளைகளை வெட்டி வைத்தாலே வளரும் தன்மை கொண்ட எளிமையான தாவரம் ,விதைகள் மூலமாகவும் வளர்க்கலாம் ,தினமும் ஈரப்பதம் இருப்பது அவசியம் ,தொட்டி செடியாகவோ அல்லது குறைந்த இடதிலோ இதை வளர்க்கலாம்,தற்போது எல்லா நர்சரிகளிளும் பூனைமீசை மூலிகை கிடைக்கும் ,ஒரு செடி மற்றும் கிடைத்தால் போதும் ,அதன் மூலம் ஏகப்பட்ட செடிகள் உருவாக்கலாம்.

பூனை மீசை செடியின் அறிவியல் பெயர்-Orthosiphon aristatus ,இதை ஜாவா டீ என்றும் ,சீரக துளசி என்றும் அழைப்பர் ,இந்த மூலிகை துளசி இனத்தை சார்ந்த ஒன்றுதான்.

இந்த மூலிகையின் இலை,தண்டு,வேர்,விதை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்து,பச்சையாகவோ அல்லது காய்ந்த நிலையில்லோ உபயோகப்படுத்தலாம்...

நாங்கள் பல நபர்களுக்கு கொடுத்து பார்த்து பலன்களை கீழே கொடுத்துள்ளோம்...நீங்களும் இந்த மூலிகை செடியை வளர்த்து பயன் பெறுங்கள்.. 

பித்தபையில் கல் மற்றும் நோய் தொற்று இருந்தவர்களுக்கு நான் 4 நபர்களுக்கும்  மற்றும் என்னுடைய நண்பர் அவருடைய நண்பருக்கும் கொடுத்து பார்த்தோம் ,எளிமையாக அதே சமயத்தில் பரிபூரணமாக குணம் கிடைத்தது.இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் . 250 மில்லி நீரில் 20 கிராம் மூலிகையை போட்டு நன்றாக(5 நிமிடம்) கொதிக்க வைத்து ஆற வைத்து இளம் சூடாக அருந்த சொன்னோம்.


நீண்ட வருடங்களாக சர்க்கரை நோயாளும் ,இதன் காரணமாக வரும் பிறப்பு உறுப்பில் வரும் புண்,எரிச்சல்,கல்லிரல் கொழுப்பு (ப்பேட்டி லிவர்),செரிமான கோளாறு,மலசிக்கல் மேலும் ஆங்கில மருந்துகளின் பக்கவிளைவுகளை உடனடியாக சரி செய்கிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம்.200 மில்லி நீரில் 10 கிராம் மூலிகையை போட்டு நன்றாக (5 நிமிடம்) கொதிக்க வைத்து ஆற வைத்து இளம் சூடாக அருந்த சொன்னோம். 

உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் உள்ளவர்களுக்கு இந்த மூலிகையை கொடுத்து சோதனை செய்ததில் 5 வாரங்களுக்குள் கட்டுக்குள் வந்துவிடுகிறது, இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம்.200 மில்லி நீரில் 10 கிராம் மூலிகையை போட்டு நன்றாக (5 நிமிடம்) கொதிக்க வைத்து ஆற வைத்து இளம் சூடாக அருந்த சொன்னோம்.


சிறுநீரக கோளாறுகளான எரிச்சல் ,புண் ,கல் ,நீர் கட்டி போன்ற பிரச்சனைகளை  உடனடியாக சரி செய்கின்றது,மேலும் கிரியோடீன்,யூரியா போன்றவை அதிகமாக இரத்ததில் கலந்து இருப்பவர்களுக்கு கொடுத்ததில் படிப்படியான முன்னேற்றமே கிடைத்தது.... இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் . 250 மில்லி நீரில் ஒரு கைப்பிடி  மூலிகையை போட்டு நன்றாக(5 நிமிடம்) கொதிக்க வைத்து ஆற வைத்து இளம் சூடாக அருந்த சொன்னோம்.

ஆங்கில மருந்து,மது,புகை,தேவையற்ற நச்சு உணவுகள் காரணமாக இரத்தம் அசுத்தமாக உள்ள நபர்களுக்கு கொடுத்து சோதனை செய்ததில் இந்த மூலிகை அதிகப்படியான சிறுநீர் போக்கின் மூலமாக நச்சு கழிவுகளை உடலில் இருந்து வெளியற்றுகிறது ,உடலை நன்கு புத்துணர்ச்சியுடன் இயங்க வைக்கிறது இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் .150 மில்லி நீரில் 10 கிராம் மூலிகையை போட்டு நன்றாக(5 நிமிடம்) கொதிக்க வைத்து ஆற வைத்து இளம் சூடாக அருந்த சொன்னோம்.
மேலும் இந்த மூலிகை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து,நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யவும்,உடல் எடையை குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது, தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .இதை பல நண்பர்களுக்கு கொடுத்து சோதனை செய்து வருகிறோம்,நல்ல முன்னேற்றம் கிடைத்து கொண்டு இருக்கிறது,இன்னும் முழு குணம் கிடைக்கவில்லை ,      


மாறிவரும் உணவு பழக்கம்,மேலும் தற்போது நமக்கு கிடைக்கும் அனைத்து உணவு பொருள்களிலும் அதிகப்படியான உப்புகள் ,ரசாயனங்கள் கலந்துதான் வருகின்றது,என்னதான் நாம் ஆரோக்யமாக உணவுகள் எடுக்கின்றோம் என்று நினைத்து கொண்டு இருந்தாலும் உடல் படிப்படியாக செயல் இழக்க தொடங்குகிறது...நாம் இந்த கழிவுகளை அவ்வப்போது வெளியற்றினால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும், எனவே பிரச்னை உள்ளவர்கள் மட்டும் தான் இந்த மூலிகை கசாயம் அருந்த வேண்டும் என்பதில்லை ,வழக்கமாக டீ,காபி அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் இதற்கு பதிலாக இந்த கசாயத்துடன் பனை வெல்லம் அல்லது கரும்பு வெல்லம் ஏதேனும் ஒன்றை கலந்து இளம் சூடாக அருந்தலாம்.இப்படி செய்வதன் மூலம் தேவை இல்லாத நச்சு கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேற செய்கின்றது.


இந்த மூலிகையை டீ ஆகா செய்து பயன்படுத்த விரும்பினால் 150 மில்லி நீரில் 5 கிராம் பொடியை போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி,பனை வெல்லம் அல்லது வெல்லம் சேர்த்து அருந்தலாம் .

முடிந்த அளவு இயற்கை வழியில் விளைந்த உணவு பொருள்களை எடுத்தும் ,தேவை இல்லாத உணவு பழக்கம்,மது ,புகை ,புகையிலை பழக்கம் இவற்றை கைவிட்டும் வாழ்ந்தாலே எந்த விதமான நோய்களும் நம்மை அணுகாது,அப்படி வந்தாலும் உடனடியாக விலகிவிடும்       


மேலும் விவரங்களுக்கு-----

தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751


வெள்ளி, 29 ஜூலை, 2016

ஓரிதழ் தாமரை காயகல்பம்:


ஓரிதழ் தாமரை,தொழுகண்ணி,விஷ்ணுகிரந்தி,கீழாநெல்லி ,மணதக்காளி கீரை,மகா வில்வம் ஆகிய மூலிகைகளை சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து ,தனித்தனியாக பொடித்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்.

காலை மாலை வெறும் வயிற்றில் ஐந்து கிராம் பொடியை 15 கிராம் தேன் கலந்து அருந்த வேண்டும் அல்லது 100 மில்லி பாலில் 5 கிராம் பொடியை கலந்து அதனுடன் பனை கல்கண்டு சேர்த்து அருந்த வேண்டும்.

உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியற்றி சகல உறுப்புகளையும்(வயிறு கல்லீரல்,கணையம்,சிறுநீரகம்,இனபெருக்க உறுப்புகள்) புதுபித்து நன்றாக இயங்க செய்யும்.உடலில் உள்ள உறுப்புகளின் கெட்ட கழிவுகளை வெளியற்றினாலே அதன் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.இது ஏறக்குறைய வாகனங்களை சர்விஸ் விடுவது போன்றதுதான்.

நான் சிறுவனாக இருக்கும் போது ,என்னுடைய ஆயா வருடத்தில் சில முறை கீழாநெல்லி கீரையை அரைத்து உருண்டையாக உருட்டி வாரத்தின் விடுமுறை நாட்களில் கொடுப்பார்கள்,வாசனையை பார்த்தாலே கசப்பாக இருக்கும்,வாந்தி வரும்,விழுங்கும் போதே வாந்தி வரமாதிரி ஏமாற்றி துப்பினால் ,அவர் கைவசம் இன்னும் சில உருண்டைகள் இருக்கும் அதை தந்து விழுங்க செய்வார் ,வயதுக்கு தகுந்தார் போல உருண்டையின் அளவும்,எடையும் மாறுபடும்,ஏதுக்கு ஆயான்னு கேட்டால்,மஞ்சள் காமாலை வராது ,வயித்து பூச்சி சாகும்,நல்லா பசி எடுக்கும்னு சொல்லுவாங்க(அது கல்லீரலையும், வயிற்றையும் சுத்தப்படுத்தி அங்குள்ள கழிவுகளை வெளியே ற்றும் வேலையை செய்கிறது).இந்த நிகழ்வு நம்மில் பலருக்கு நடந்த ஒன்றுதான்.



வயல் வேலைக்கு செல்லும் பெண்கள் மதிய உணவுக்கு தூக்கு என்ற பாத்திரத்தில் உணவு எடுத்து செல்வர்கள் திரும்பி வீட்டுக்கு வரும் போது சில காட்டு கீரைகளும் அதனோடு மணதக்காளி கீரை மற்றும் அதன் பழங்களை கொண்டு வருவர் ,பழங்களை காய வைத்து வற்றலாக செய்து குழம்பு வைப்பார்,கீரையை துவையளாகவோ,குழம்பாகவோ செய்வர் ,இது இனபெருக்க உறுப்பு,சிறுநீரகம்,கல்லீரல் போன்ற உறுப்புகளை பலப்படுத்தும்.


சிவாலயங்களில் தொன்று தொட்டு செய்துவரும் வில்வ இலை அபிசேகம்,நாம் அறிந்த ஒன்றுதான் அந்த வில்வ இலைக்கு நுரையீரல்,ரத்த ஓட்டம்,வயிறு,இனபெருக்க மண்டலம் ஆகியவற்றில் உள்ள கழிவுகளை அகற்றி பலப்படுத்தும் தன்மை கொண்டது.ஆனால் நம்மில் எத்தனை பேர் ,ஆலயத்தில் கொடுக்கும் வில்வத்தை சாப்பிடுகிறோம்,கண்ணகளில் ஒற்றி வைத்துவிடுகிறோம் .அடுத்த முறை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்,

ஒரிதழ் தாமரை இந்த மூலிகையின் சக்தி என்னவென்றால் எப்படிப்பட்ட தேறாத உடலையும் தேற வைக்கும்,விந்து நஷ்டத்தால் ஏற்ப்பட்ட உடல் நடுக்கம்,உடை எடை குறைவு,முதுகு வலி,கண்ணங்கள் ஒடுங்கி       காணப்படுவது,கண்ணு கீழ் கருவளையம்,உடல் சோர்வு போன்றவற்றை உடனடியாக நீக்கும்.பெண்களுக்கு இனபெருக்க மண்டலத்தை சுத்தபடுத்தும்.
        
விஷ்ணுகிரந்தி இந்த மூலிகையின் சக்தி என்னவென்றால் நரம்பு தளர்ச்சி அதித விந்து நஷ்டம்,உடல் சூடு மறதி அகியவற்றை நீக்கும்.
தொழுகண்ணி இது காய சித்தி மூலிகையாகும்,சித்தர்கள் உடம்பை காய சித்தி ஆக்க பயன்படுத்தினார்கள்.(நரை,திரை மூப்பு நீங்க).உடம்பை இறுக்கி பொலிவுற செய்கிறது...

நீங்க சொல்வது சரிதான் நீங்க கொடுத்த மூலிகைகளில் கீழா நெல்லி ,மணத்தக்காளி இரண்டையும் பார்த்து இருக்கோம்,ஓரிதழ் தாமரை பொடி, விஷ்ணுகிரந்தி நாட்டு மருந்து கடைகளில்,ஆனால் தொழுகண்ணி,மகா வில்வம் எங்கு கிடைக்கும் அப்புறம் எப்படி இதை செய்து சாப்பிடுவது.கிடைக்கும் மூலிகைகளை சம அளவு எடுத்து கலந்து வைத்து கொண்டு மேல் கூறியவாறு செய்யவும் நல்ல பலன் கிடைக்கும். 

நாங்கள் செய்து கொடுத்த இந்த கலவையை கல்யாணம் ஆனா குழந்தை இல்ல தம்பதிகளுக்கும் ,இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்யும், தம்பதிகளுக்கும் கொடுத்தோம்......

17 தம்பதிகளில் 6 தம்பதிகளுக்கு கரு உருவாகி உள்ளது,ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகி உள்ளது,
இந்த கலவை ஆண்களுக்கு 100%  உதவி செய்கிறது.பெண்களுக்கு 20% தான் உதவி புரிகிறது.இதனுடைய பயன்கள் 
ஆண்,பெண் இருவருக்கும் இனபெருக்க மண்டலத்தை சுத்தப்படுத்தி பலப்படுத்துகிறது,

இருவருக்கும் பசிஇன்மை,உடல் எடைகுறைவு,சோர்வு ,உடல் அசதி ஆகியவற்றை நீக்கி நன்கு சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

பெண்களை விட ஆண்களுக்கு 100% பலன் கிடைக்கிறது,அதாவது தேறாத உடலையும் தேற்றி ,கெட்ட கொழுப்புகளை அகற்றுகிறது மேலும் ,தரமான விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது,விந்தணுக்களை கட்டிப்படுதுகிறது ,உடல் சூட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருகிறது.  மேலும் விவரங்களுக்கு-----

மேலும் விவரங்களுக்கு----
1.Sathuragiri Herbal Research Center (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

ரச லிங்கம் வழிபாடு:


ரசமணிக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ அதைவிட பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்.வீட்டிலோ அல்லது வியாபரம் செய்யும் இடத்தில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் சகலவிதமான காரிய தடைகளும் நீங்கும்,ஏவல்,பில்லி,சூனியம் போன்ற எந்த விதமான மந்திர தந்திர வித்தைகளும் பலிக்காது.வியாபாரம் செழித்து வளம் பெரும்.போட்டி பொறாமை அகன்று நேர் வழியில் பயணிக்க வைப்பதில் ரச லிங்க வழிப்பாடு மிகவும் சக்தி வாய்த்த ஒன்றாகும்.






தற்போது ரச லிங்க வழிப்பாடு என்பது மிகவும் அரிதாகிவிட்டது,காரணம்,முதலில் பயன் பற்றிய அறியாமை,விலை அதிகம்,கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது உண்மையான ரச லிங்கமா என்ற ஒரு சந்தேகம் உள்ளது ,ஏன் என்றால் தப்போது கிடைக்கும் ரச லிங்கங்கள் அனைத்தும் வெள்ளியம் மற்றும் பாதரசத்தை சுத்தி செய்யாமல் ஒன்றாக உருக்கி செய்யப்பட்ட லிங்கமாகவே கிடைக்கிறது.மேலும் தெய்விக சக்திக்கு பயந்து உண்மையான ரச லிங்கம் மற்றும் ரச மணி செய்யும் ஆசான்கள் வெகு சிலரே தற்போது உள்ளனர்,

அப்படிப்பட்ட 86 வயதுடைய ஆசான் ஒருவரை சந்தித்த போது அவர் கூறிய தகவல் தம்பி ,எனக்கு எழுத படிக்க தெரியாது ,குருகிட்ட கத்துகிட்டதுதான் நான் ரச லிங்கம் செய்ய ஆரம்பிச்ச காலத்துல இருந்தே வட நாட்டு ஜோசியகரங்க தான் அதிகமாக வந்து வாங்கிட்டு போவானுங்க எங்கிட்ட அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டு போய் 60 ஆயிரம் முதல் இலட்ச கணக்கு வரை விலை வைத்து விற்ப்பார்கள்,நம்ம ஊரு ஜோசியகரனுங்க வடநாட்டுல இருந்து வாங்கிட்டு வந்து (நம்ம ஆளுங்க செய்து அனுப்பிய) இங்க ஒரு காலத்து வித்தாங்க

லிங்கத்துக்கு உங்களோட ஆத்மார்த்தமான வழிபாடுதான் மிகுந்த சத்தியை தரும்,வேறு ஏதும் தேவை இல்லை ,நான் செய்து கொடுத்த காலத்தில் ரச லிங்க வழிப்பாடு செய்யும் நபர்களுக்கு பின்ன அவங்க வீட்டுல தொழில் செய்ற இடத்தில யாரவது ஏவல்,பில்லி ,சூனியம் போன்ற எந்த மந்திர தந்திர கட்டுகளும் செய்ய முடியாது,செய்தாலும் பலிக்காது ,அப்படி பலிச்சதுனா நான் ரச லிங்கம் செய்றத நிறுத்திடுவேன் ,சொந்த செலவில் நானே கட்டை எடுத்து விடுவேன் என்று சொல்லித்தான் செய்துதருவேன் என்றார்,

அவரு ஜனாதிபதி (ராசலிங்கம்),அவருகிட்ட இது கிடைக்குமா அது கிடைக்குமா என்று கேட்காமல் வழிப்பாடு மாட்டும் தீவிரமாக செய்ங்க மற்றது எல்லாம் அவரு பாத்துக்கொள்வார் என்று கூறினார்   
     
மேலும் பல்வேறு பிரச்னைகளுக்கும் ரச லிங்க வழிபாடு கொண்டே சரிசெய்யலாம்: 
1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும். 

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும்.செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.

4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரச லிங்கத்துக்கு  உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

6.காரியசித்திவாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

7.சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.  

8.திருமண தடையை நீக்கும்.

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

11.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.

12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.

13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற ஆற்றல்களை அள்ளித்தரும்.
மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது ,மேலும் அனுபவம் வாய்ந்த சித்த வைத்தியர்கள்,தற்போது ரசமணி & ரச லிங்கம் உபயோகப்படுத்தும் நண்பர்கள் ,ரசமணி & ரச லிங்கம் செய்வதில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் கூறிய தகவல்களில் இருந்து அரை சதவிதம் அதிலும் குறைந்த அளவு மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டு உள்ளது.காரணம் தக்க குரு மூலம் சரியான வழியில் செய்யவும்,நல்ல எண்ணங்களும் வேண்டும் குறிப்பாக குரு அருளும் திரு அருளும் இல்லாமல் ரசமணியை & ரச லிங்கம் செய்யவோ உபயோகிக்கவோ முடியாது.

 “விதியாளி காண்வான் பாரு”

        என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி  & ரச லிங்கம் வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.

உண்மையான ரசலிங்கம் என்றால் நம்முடைய வீட்டில் வைத்து வழிப்பாடு தொடங்கியது முதல் மாற்றம் தரும்.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)


-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com


புதன், 30 மார்ச், 2016

அகஸ்தியர் இளமதி காயகல்பம்

அகஸ்தியர் இளமதி காயகல்பம்- அனைத்து வகையான முகத்தில் (தோலில்) உண்டான பாதிப்புகளையும் சரி செய்து முகப்பொலிவு ,வசீகரத்தை கொடுத்து நம்முடைய இயற்கை நிறத்தை மீட்டு தரும்(கருவில் உள்ள நிறம் கிடைக்கும்) என்பது அகஸ்தியர் வாக்கு.






சந்தனம் ,செஞ்சந்தனம் ,கருநெல்லி,சிவப்பு கற்றாழை ,அதிமதுரம்,கடலை,வெட்டிவேர் ,குங்கும பூ,பச்சை பருப்பு போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது தான் இந்த அகஸ்தியர் இளமதி காயகல்பம் சூரண பொடி.அகத்தியர் அருளியது.

அகத்தியரின் கூற்றுபடி,இந்த சூரணத்தை சுத்தமன பன்னீர்(ரோஜா நீர்) அல்லது புதினா இலை சாறு உடன் கலந்து இரண்டு வேலை காலை ,இரவு என்று முகத்திலோ அல்லது பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் பூசி நன்றாக காயும் முன்பு கழுவி வந்தால் 21 நாட்களில் கருவில் உள்ள நிறம் கிடைக்கும்,மேலும் முகத்தில் உண்டான காயத்தால் ஏற்படும் கருந்தழும்பு ,அம்மை தழும்பு,சொறி,சிரங்கினால் உண்டான கருப்பும்,டை அடிப்பதினால் முகத்தில் உண்டாகும் கருமை படிவு ,கருவளையம்,மங்கு,முகப்பரு மற்றும் அதன் தழும்புகள் ,ரசாயன பதிப்புகளால் உண்டான இருண்ட முகம்,என அனைத்து வகையான முகத்தில் (தோலில்) உண்டான பாதிப்புகளையும் சரி செய்து முகப்பொலிவு ,வசீகரத்தை கொடுத்து நம்முடைய இயற்கை நிறத்தை மீட்டு தரும் என்பது அகஸ்தியர் வாக்கு.

இந்த மூலிகை குறிப்பு பார்தினிய செடியால் உண்டான ஒவ்வாமை காரணமகா முகம் முழுவதும் கருமை அடைந்து விட்டது,அந்த அன்பருக்காக செய்தது,மருந்து செய்த பின் அவருக்கு தகவல் தந்தபோது,அவர் சரியாக பதிலளிக்கவில்லை,சரி நாமே சோதிப்போம் என்று முடிவு செய்து நானும் என்னுடைய நண்பரும் உபயோகம் செய்தோம்,முகத்தில் உள்ள தழுப்புகள் படிப்படியாக மறைய ஆரம்பித்து வெளிறிவிட்டது,கருவளையம் மறைந்து ,முகப்பருக்கள் வருவது ஏறக்குறைய நின்றுவிட்டது.இது எடுத்த 14 நாட்களில் கிடைத்த பலன்,இதன் பிறகு எனக்கு அம்மை மையம் கொண்டது,உச்சி முதல் உள்ளங்கால் வரை இருந்தது,ஆனால் முகத்தில் எந்த ஒரு சிறு பதிப்பும் ஏற்ப்படவில்லை.

பழனியில் உள்ள நண்பருக்கு (வயது-28) முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முற்றிலும் நீங்கியது,அவருடைய முகத்தில் தேங்கி இருந்த கருந்தழும்புகள் மறைந்து முகப்பொலிவு கிடைத்தது,தற்போது முகத்தில் எண்ணெய் வடிவது அறவே இல்லை.

சேலம் நண்பருக்கு (வயது-32+) உபயோகத்த 5 நாட்களில் முகத்தில் உள்ள தோல் மிருதுவாக இருக்கிறது,எண்ணெய் வடிவது 40% குறைந்துள்ளது என்றார்.அவருடைய உறவு பெண்ணுக்கு (வயது -19) தோல் மிருதுவகிவிட்டது,முகபொலிவு கிடைத்துள்ளது,எண்ணெய் வடிவது 70% குறைந்துள்ளது என்று தகவல் கொடுத்துள்ளார்,

கடலூர் நண்பருக்கு (வயது-35) உபயோகத்த 17 நாட்களில் இரண்டு கன்னத்தில் உள்ள கருமை நிற தோல்கள் பழைய நிறத்திக்கு வர தொடங்கி உள்ளது,நெற்றியில் உள்ள கருமை மறைந்து விட்டது,கரும்புள்ளிகள் அகண்ருள்ளது,முகபொலிவு வந்துள்ளது என்றார்.அவருடைய மாமாவுக்கு (வயது 51) நெற்றியில் உள்ள கருமை மறைந்து விட்டது,முகப்பொலிவு ஏற்ப்பட்டு உள்ளது. 
  
சேலம் உள்ள மற்றும் ஒரு நண்பருக்கு கொடுத்த போது அவர் இரண்டு பெண்களுக்கு கொடுத்துள்ளார்,ஒருவருக்கு இரண்டு முறை உபயோகித்த போது முகப்பரு அதிகமாகிவிட்டது,பயந்து மேலும் உபயோகிக்காமல் இருந்துள்ளார் ,இன்னொருவருக்கு ,பேசியல் செய்த மாதிரி முகம் பளிரென்று உள்ளது ,நல்ல கலர் கிடைத்துள்ளது என்று கூறினார்.
இதுபோல் பல ஆச்சரியமான பலவிஷயங்கள் கிடைத்துள்ளது,தகவல்  கொடுத்தவர்களின் விவரங்கள் மட்டுமே பதிவு செய்து உள்ளோம். 
மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com 
.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்கள் 

அகஸ்தியர் முழுமதி காயகல்பம்

அகஸ்தியர் முழுமதி காயகல்பம் :
சந்தனம் ,செஞ்சந்தனம் ,கருநெல்லி,சிவப்பு கற்றாழை ,அதிமதுரம்,கடலை,வெட்டிவேர் ,குங்கும பூ,பச்சை பருப்பு,கடல் பாசி ,ஆலம் விழுது  போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது தான் இந்த அகஸ்தியர் முழுமதி காயகல்பம் சூரண பொடி.அகத்தியர் அருளியது.

அகத்தியரின் கூற்றுபடி,இந்த சூரணத்தை சுத்தமன பன்னீர்(ரோஜா நீர்) அல்லது புதினா இலை சாறு உடன் கலந்து இரண்டு வேலை காலை ,இரவு என்று முகத்திலோ அல்லது பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் பூசி நன்றாக காயும் முன்பு கழுவி வந்தால் முகப்பரு மற்றும் அதன் தழும்புகள் ,ரசாயன பதிப்புகளால் உண்டான இருண்ட முகம்,மேலும் முகத்தில் உண்டான காயத்தால் ஏற்படும் கருந்தழும்பு ,அம்மை தழும்பு,சொறி,சிரங்கினால் உண்டான கருப்பும், ,கருவளையம்,மங்கு, ,என அனைத்து  முகத்தில் உண்டான பாதிப்புகளையும் சரி செய்து முகப்பொலிவு ,வசீகரத்தை கொடுத்து நம்முடைய இயற்கை நிறத்தை மீட்டு தரும் என்பது அகஸ்தியர் வாக்கு.





இந்த சூரணத்தை நான்கு பெண்களிடம் கொடுத்து சோதித்து பார்த்ததில் ,மறுநாளே முகத்தில் உள்ள பருக்கள் வீக்கம் சுருங்கி வலி குறைந்து காணப்பட்டது,முகப்பருவினால் உண்டான கருந்தழும்புகள் 13 நாட்களில் இருந்து மறைய தொடங்கியது,பேசியல் செய்த பலன் கிடைத்தது,இழந்த பழைய நிறம் கிடக்க தொடங்கியது.
மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com 
.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்கள் 



போகர் காயகல்பம்

போகர் காயகல்பம்- தலையில் உள்ள தூர் நீர் அகலும்,நரை கருக்கும்,தலைவலி அகலும் ,கண் ஒளி பெருகும் என்பது சித்தர் வாக்கு

நெல்லிக்காய்,கடுக்காய்,தான்றிக்காய்,சுக்கு,மிளகு திப்பிலி,மஞ்சள்,வேப்பம் விதை,போன்ற மூலிகைகள் கலந்து செய்யப்பட்டது தான் இந்த போகர் காயகல்பம் ,இது பஞ்சகல்பம் என்னும் அறிய மருந்தில் சில மாறுதல்கள் செய்து தயார் செய்யப்பட்டது.






பஞ்ச கல்பம் பயன்கள் நாமக்கு தெரியும்,எனவே இந்த கலவையை முதலில் என்னோடு சேர்த்து மூன்று நபர்களுக்கு மட்டும் கொடுத்து சோதித்தோம்,இரண்டு நபர்களுக்கு மூன்றாம் வாரத்தில் இருந்து நாரை முடி மருதாணி போட்டது போல நிறம் மாற ஆரம்பித்துவிட்டது.ஒருவருக்கு தலைமுடி கொட்டுவது சரியாகி உறுதியாகிவிட்டது,இன்னொருவருக்கு பொடுகு தொல்லை குறைந்து அரிப்பு நீங்கி முடி பஞ்சு போல உள்ளது என்று கூறினார்,
குறிப்பாக எந்த பக்கவிளைவும் இதனால் இல்லை என்று அறிந்த பின்பு ,கண்பார்வை பதிப்பு உள்ள நபர்கள்,தலையில் நீர் கோர்ப்பு உள்ளவர்கள் ,தலைவலி என்று வந்த அனைத்து நபர்களுக்கும் முதலில் இந்த கலவையை சொல்லி செய்து உபயோகிக்கக் சொன்னோம் ,அனைவருக்கும் ஆச்சரியப்படும் அளவில் தீர்வு கிடைத்துள்ளது.

இந்த மூலிகை கலவையை பாலில் கலந்து தலைக்கு மற்றும் நெற்றியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சீகைக்காய் போட்டு குளித்தால்,தலையில் உள்ள தூர் நீர் அகலும்,நரை கருக்கும்,தலைவலி அகலும் ,கண் ஒளி பெருகும் என்பது அகத்தியர் வாக்கு ,போகர் மற்றும் வள்ளலார் அவர்களும் சில சில மாறுதல்களோடு மூலிகை குறிப்பை கொடுத்து இதே பலன் கிடைக்கும் என்று பாடி உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com 
.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்க