இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

கணை எருமை விருட்ச பால்

நோய் நீக்கும் ஆயுள் தரும் காய கற்பம் கணை எருமை விருட்ச பால்!
நோய் நீக்கும் நல் ஆயுள் தரும் காய கற்பம் கணை எருமை விருட்ச மூலிகை அமிர்தம்!
 காயகற்பம் என்பது சித்தர்கள் கையாண்ட அருமூலிகைப்பயன்பாடு மற்றும் சித்த மருத்துவத்திலும் மிக அரிய நிகழ்வாக முக்கியத்துவம் கொடுக்கப்படும் மனித உடல் என்றும் நோயின்றி,நோய் நீங்கி,நரை திரை மூப்பு இன்றி, உடல் தளர்வின்றி நீடித்த இளமைப்பொலிவுடன் திகழ அருளப்பட்ட அரிய மூலிகை வைத்திய முறை.
கற்ப மூலிகைகள் எண்ணிறந்தவை அவற்றின் பயன்பாடுகள் பலதரப்பட்டவை, சித்தர்கள் பல்வேறு வகை மூலிகைகளை அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியமும் நெடு வாழ்வும் பெற்று அவர்கள் இந்த புவிக்கு ஆற்ற வந்த காரியத்தை ஆற்றுவதற்காகவும், உடல் சார்ந்த இத்தகைய கற்ப மூலிகைகளை சாப்பிட்டு வந்தனர்.


அத்தகைய சித்தர்கள் அருளிய பல அற்புத காய கற்பங்கள் இன்று நமக்கு புத்தக வடிவில் மட்டுமே அறியக்கிடைக்கின்றன.சில அரிய வகை மூலிகைகள் மூலமான காய கற்பங்கள் இன்று நமக்குக்கிடைப்பது  இயலாத காரியமாகிவிட்டது, இன்னது தான் இந்த கற்பமூலிகை எனச்சொல்லும் ஆற்றலும் அருகிவிட்டது.
சித்தர்கள் எத்தனையோ உயரிய காயகற்ப வகைகளை மக்கள் அறியத்தந்திருந்தாலும், அவை எல்லாமே, குறிப்பிட்ட கற்ப மூலிகையின் சமூலத்தினை சூரணமாக்கியோ அல்லது கற்பமூலிகைகளின் கொட்டைகளை நீக்கி அதன் தோல் பகுதியை சூரணமாக்கியோ அல்லது கற்ப மூலிகைகளோடு தேன் அல்லது வேறு சில மூலிகைகள் துணை கொண்டு நாம் உபயோகிக்கும் வண்ணம் இருக்கும், உதாரணம், வல்லாரை,கற்பூரவில்வம், கடுக்காய்,நெல்லி, தான்றிக்காய் சூரணங்கள் மற்றும் சில பற்பம் மெழுகு வகைகள்.
ஆயினும், இத்தகைய காய கற்ப வகைகளிலே, சிறப்பாக, யாதொரு பக்குவமும் இன்றி,அப்படியே உட்கொண்டு காய சித்தி அடையும் வழிதனையும் சித்தர்கள் பாடல்களில் மறைப்பொருளில் உரைத்திருக்கின்றனர். அத்தகைய ஒரு காய கற்பம்தான் , கணை எருமை விருட்ச மரத்திலிருந்து வடியும் பால், அந்த பால் ஒரு கட்டத்தில் உறைந்து, பெருந்துகள்கள் வடிவில் மரத்திலேயே காணப்படும்.
நாம் வணங்கும் சதுரகிரி ஈசன் அருளால், அவரை அனுதினமும் தொழும் ஆதிசித்தர்கள் ஆசிகளாளும், நமக்கு கணை எருமை விருட்ச மூலிகை அமிர்த பால் அதன் பெருந்துகள் வடிவத்தில் கிடைத்தது,
கணை எருமை விருட்சம் , சித்தர்களால், மிக உயர்வான விருட்சமாகக் கூறப்படுகிறது, கணை எருமை விருட்சம் அருகே மனிதர் வாடை அறிந்தாலே, அந்த விருட்சம் கணைத்துத்தன் எச்சரிக்கை உணர்வை பிற அதனைச்சார்ந்த உயிர்களுக்கு அறியச்செய்யும்.மேலும் பவுர்ணமி தினங்களில் கணைக்கும் கணை எருமை விருட்சம் அமாவாசை நாட்களில் அந்த கற்பப்பாலை சுரக்கும்.இத்தகைய அரிய நிகழ்வை மலை வாழ் மக்கள் எளிதில் இனங்கண்டுகொள்வர்.

அத்தகைய மிக உணர்வான கணை எருமை விருட்சம், தன் இயல்பில், அதன் மரப்பட்டைகளில் பால் சுரக்கும் தன்மையுடையது, மேலும், இத்தகைய பாலே, பின்னர் பிசினாக, முருங்கைப்பிசின் போல மரத்திலேயே காய்ந்து இள வெண்மை நிறத்தில் காணப்படும் துகள்களாகிறது. இந்த அரிய வகை பிசினே கணை எருமை விருட்ச மூலிகை அமிர்தமாகிறது. சுவைக்க கற்கண்டு போல, இனிப்புச்சுவையுடன் இருக்கும் இந்த அரிய கணை எருமை விருட்ச அமிர்தம் சாப்பிட்டவுடனே தேகத்தைக் கற்பமாக்கும் வல்லமை வாய்ந்தது.
இந்த கணை எருமை விருட்ச அமிர்த மூலிகை கற்பத்தை, தினமும் ஓரிரண்டு மிளகு அளவு வெறும் வயிற்றில் காலை வேளைகளில் , தொடர்ந்து 10 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வர, தேகம் காய சித்தியாகும், உடல் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் நீங்கி,இரத்தம் சுத்தமாகும், உடல் ஆரோக்கியம் மிகும், உடல் வலிமை உண்டாகும்.நீடித்த இளமைத் தோற்றமும், ஆயுளும் உண்டாகும்.
இந்த மூலிகை அமிர்தம் சாப்பிட கடைபிடிக்க வேண்டிய பத்திய முறைகள் , அளவான அருசுவை குறைந்த உணவுவகைகள் ,நற்சிந்தனை மற்றும் போகம் நீக்கல்.
இத்தகைய கற்ப மூலிகையான கணை எருமை விருட்ச அமிர்தம் எனப்படும் மூலிகைப் பால் திரட்டான பிசின் , மிக மிக அரிதான ஒன்று. வருடத்தில் ஆடி மாதத்தில் மட்டுமே, காணக்கிடைக்கும் இந்த அமிர்தம் மரத்தில் இருந்தாலும், மனிதர் கண்ணில் படுவதில்லை, மலை வாழ் மக்களில் சிலருக்கு மட்டுமே இந்த கணை எருமை விருட்ச பால் அமிர்தம் இருப்பது தெரிந்தாலும், அவர்களாலும்  இதை எளிதாக அடைய முடியாத நிலையை இயற்கையே மிக இயல்பாகப் படைத்திருப்பது தான் மிக யோசிக்க வேண்டிய ஒரு விந்தை. ஏனெனில், இந்த கற்ப விருட்ச மூலிகை அமிர்தத்தை கண்டு அதை மலை வாழ் மக்கள் எடுக்குமுன் , மலைகளை காக்கும் இறைவனின் படைப்புகளான மலைப்பறவைகள்,மலைக்கரடிகள் மற்றும் மந்திகள் இவற்றின் இஷ்ட உணவு இந்த கற்ப விருட்ச அமிர்தம். அவை இந்த அரிய அமிர்தத்தை பிறர் காணுமுன் உண்டு விடுகின்றன. ஒருவேளை மலைகளை மலைகளில் வாசம் செய்யும் விலங்குகள் மட்டுமே காக்க முடியும் என எண்ணி அந்த விலங்குகளின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் இந்த கணை எருமை அமிர்த கற்பம் மூலம் காக்க எண்ணும் ஈசனின் திருவிளையாடலோ,
ஆயினும், நமக்கும் இந்த அரிய கணை எருமை விருட்ச அமிர்த கற்பம் சொற்ப அளவேனும் கிடைக்கும். நாம் இந்த கற்பத்தை சற்றே காத்திருந்து பெற்றாலும் பலன் நிச்சயம். இந்த அரிய கற்பம் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது, அதுவும் மிகக் குறைந்த அளவில் மட்டுமே. எனவேதான் நாம் காத்திருக்க வேண்டும், மூலிகை சாப்பிடுவதே மிகப்பெரும் பாக்கியம் , அதுவும் உடல் ஆரோக்கியம் காக்கும்,நீடித்த இளமை ஆயுள் தரும் அற்புத காய கற்பம் என்றால்!?


மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650

https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl

...................................................................................................................................................................  தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
...................................................................................................................................................................
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள் ,
...................................................................................................................................................................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக