இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 மார்ச், 2022

ஆயம் (உடல் சுத்தி) சத்துமாவு

 செய்முறை:

இரத்தசாலி அரிசி,விளாம்பழ பொடி,ஆயப்பட்டை, ஏலக்காய், சுக்கு , பூண்டு, மிளகு,திப்பிலி, தனி்தனியாக லேசாக வறுத்து பொடிசெய்து கொள்ளவும் ஒரு கிலோ அரிசிக்கு மற்ற பொருள்கள் சம அளவில் சேர்த்து 100 கிராம் என்ற அளவு இருந்தால் போதுமானது. 




இவற்றை மிக்சியில் அல்லது அரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து நன்றாக சத்துமாவு பததிற்க்கு அரைத்து எடுத்து கொள்ளவும். 75 முதல் 100 கிராம் எடுத்து சத்துமாவு காய்ச்சுவது போல் காய்ச்சி நமக்கு தேவைக்கு ஏற்றவாறு உப்பு,நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் இவற்றில் எதாவது ஒன்று கலந்து தினமும் ஒரு வேளை அல்லது இரண்டுமுறை குடிக்கலாம்.


குடித்தால் என்ன ஆகும்?

உடலில் உள்ள கெட்ட கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.உடல் தேறும்.எடை குறையும்.குறைவான எடை உள்ளவர்களுக்கு எடை கூடும்.செரிமானத்திற்கு எளியது உணவு எடுக்க இயலாதவர்களுக்கு சர்வ சத்துக்களும் அடங்கி உள்ள பொருள் இந்த கலவை.இரத்ததை சுத்தம் செய்யும். வாதம் ,பித்தம் கப தோசத்தை நிவர்த்தி செய்யும்.கால்சியம் மற்றும் புரத சத்து மிகுந்து உள்ளது ,பாலுக்குமேல் உணவாக இதை எடுக்கலாம்,செரிமானத்திற்கு எளியது. உடல் வலி மூட்டுவலி,தேய்மானம் உள்ளவர்களுக்கு நல்ல சத்து பொருள்.வாதத்தை நன்றாக கண்டிக்கும். புதுரத்ததை உருவாக்கும்.உடலின் இரத்த சுழற்சியை சிறப்பாக வைக்க உதவும். குழந்தை பேறுக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல் உணவு.குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்பால் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும். பலன்கள் அனைத்தும் பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர் கூறியது. 

பக்கவிளைவு உண்டா? 

நம் தாத்தா,பாட்டி உபயோகம் செய்த முறை,பழங்காலத்தில் இருந்து கேரளா ஆயுர்வேத வைத்தியர்கள் செய்து கொண்டு இருக்கும் முறை, இரத்தசாலி அரிசி மற்றும் விளாம்பழ பொடியேதான் போட வேண்டுமா? கிடைத்தால் சிறப்பு அல்லது இதற்கு பதிலாக பாரம்பரிய அரிசி அல்லது வீட்டில் உபயோகம் செய்யும் அரிசி மற்றும் விளாம்பழ பிசின் உபயோகம் செய்யலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி 

9486072414

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக