இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 ஜனவரி, 2018

தொழுகண்ணி மூலிகை செடி மற்றும் விதை கிடைக்கும்.

காயகல்ப மூலிகைகளில் சிறப்பான இடத்தை பெற்ற மூலிகைதான் தொழுகண்ணி என்றால் அது மிகையாகாது.

தொழுகண்ணி இலைகளை பறித்து நிழலில் காயவைத்து உலர்த்தி எடுத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
காலை, மாலை அல்லது காலை வேளையில் மட்டும் ஐந்து கிராம் பொடியை எடுத்து அதில் 15 கிராம் தேன் கலந்து அருந்தலாம் அல்லது 200 மில்லி வெள்ளாட்டு பாலில் பனைவெல்லம் கலந்து அருந்தலாம்.வெள்ளாட்டு பால் கிடைக்காதவர்கள் சூடான நாட்டு மாட்டு பால் 200 மில்லி எடுத்து அதில் ஐந்து  கிராம் பொடியை கலந்து பனங்கற்கண்டு கலந்து அருந்தலாம்.

பலன்கள்:
இப்படி சாப்பிடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்றால் முதலில் உடலில் உள்ள கெட்ட நீர் ,அழுக்கு ,கெட்ட கொழுப்பு போன்ற தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.
பிறகு உடலில் உள்ள உள்உறுப்புகள் பலமாகும்,நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.

ஆறாத புண்களை ஆற்ற இதன் இலையை அரைத்து பற்று போட்டால் உடனடியாக ஆற தொடங்குகிறது,
இதன் வேரில் கசாயம் செய்து தினமும் அருந்த சர்க்கரை நோய்,ருமோட்டிக் மூட்டு வலி,நரம்பு தளர்ச்சி,உயர் ரத்த அழுத்தம்,மன அழுத்தம் ஆகியவை குணம் கிடைக்க தொடங்குகிறது.
இலை பொடி நுரையீரலை பலப்படுத்துகிறது,மூளைக்கு சத்தி அளித்து மன நோய்யை அகற்ற உதவும்.
வளர்சிதை மாற்ற செயல்படுகளை சீரக்க உதவி செய்யும்,இதன் மூலம் செல்களின் வாழ்நாளை அதிகப்படுத்தி  மனிதனுக்கு நீண்ட ஆயுளை தருகிறது,(இதை தான் சித்தர்கள் நரை,திரை மூப்பு நீங்கும் காய கல்ப மூலிகை என எழுதி வைத்து உள்ளனர்)
.இளைத்த உடல் எடை கூடி வழுவாகும்,
பருத்த உடல் இளகி உடல் இறுகி வழுவாகும்.
உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.
விந்து உற்பத்தியை அதிகரித்து ,விந்துவை கட்டிப்படுத்தும் மேலும் விந்தணுக்களின் முழு வளர்ச்சி மற்றும் ஆரோக்கம் 100 % அடையும்.
முகம் ஒடுக்கம்,உடல் அயர்ச்சி நீங்கி முக வசிகரம் மற்றும் அழகை கூட்டும்.

எப்படி வளர்ப்பது
ஒரு பாத்திரத்தில் இளம் சூடான நீரை எடுத்து அதில் விதைகளை போடவேண்டும் பிறகு வெளியில் படும் இடத்தில் ஒரு மூன்று நாள் வைத்து பிறகு விதைக்கலாம் .அல்லது வெயிலில் வைப்பதற்க்கு பதிலாக ரு பாத்திரத்தில் இளம் சூடான நீரை எடுத்து அதில் விதைகளை போடவேண்டும் பிறகு பாத்திரத்திற்க்கு மேல்15 செமீ நீளம் இடைவெளி விட்டு ஒரு குண்டு பல்பு ஒன்றை ஒளிர வைக்க வேண்டும்.(2 நாட்கள்).
தானாக வெடித்து கீழே விழுந்த விதைகள் அடுத்த வரும் மழை காலத்தில் முளைத்துவிடும் பிறகு கன்றுகளை இடம் மாற்றி வளர்க்கலாம்.
அடிக்கடி தொடுதல், கிள்ளுதல்,அதிகப்படியான இரைச்சல்,குறைவான சூரிய வெளிச்சம், அசுத்தமான சுற்றுபுறம் போன்ற காரணிகளால் செடி இறந்துவிடும் அல்லது வளர்ச்சி குன்றும்.

மற்ற பலன்கள்:இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்ட தொழுகண்ணியை சித்தர்கள் காயகல்ப முறைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர், தொழுகண்ணி மூலிகையின் வேரில் வடக்கு நோக்கி போகும் வேரை காப்பு கட்டி எடுத்து  தாயத்து செய்து அணிந்தால் சகலமும் வசியமாகும்(ஜனம்,காரியம்,பணம்,பதவி,லட்சுமி,குபோரன்) என்பது சித்தர்கள் வாக்கு ஆகும்
 சித்தர்கள் பாடலில் வசியத்திற்கு உபயோகப்படுத்தலாம் என்று கூறி இருப்பதால்  தற்போது தொழுகண்ணி மூலிகை ஏறக்குறைய அருகி  வருகிறது .தற்போது அதிகம் பணம் தரும் வருவாய் மூலிகையாக மறி மருத்துவத்திற்க்கு பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

மேலும் விவரங்களுக்கு-----

1.Sathuragiri Angadi-----      https://www.facebook.com/sathuragiriangadi/

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்-94860 72414(whatsApp),
96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.......................................................................................................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக