இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 ஜனவரி, 2017

தேன் வில்வம்


நன்கு பழுத்து விழும் வில்வ பழங்களை எடுத்து அதன் ஓடு நீக்கி உள்ளே உள்ள பழ சுளைக்கு இருமடங்களவு தேன் எடுத்து வைத்து கொள்ளவும்.
முதலில் தேனை நன்றாக காய்ச்சவும்,பிறகு எடுத்து வைத்துள்ள வில்வ பழ சுளைகளை அதனுள் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும் ,பின்பு அடுப்பை அனைத்து நன்றாக கிளறவும்,பிறகு சூடு ஆறியதும் ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் போட்டு பாட்டிலின் வாயை வெள்ளை துணி கொண்டு கட்டவும் ,இதனை நீர் சுண்டும் வரை தினமும் சூரிய ஒளியில் வைக்கவும்.பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்,தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் எடுத்து சாப்பிடவும்.

அனைத்து வகையான செரிமான கோளாறுகளையும் சரி செய்யும்(வயிற்று போக்கு,சீதபேதி ,வாயு தொல்லை ,புண், கான்செர்,தாமதமான ஜீரணம்)
தோல் மற்றும் முடியை பளபளப்பாகவும்,மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது,

உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது,தசைகள் மற்றும் இதயம்,ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய உதவும்,இதன் மூலம் இதய அடைப்பு வராமல் தடுக்கலாம்,

விந்து நஷ்டத்தை நீக்கி ஆண்மையை அதிகரிக்க செய்யும்,மேலும் சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கும்,  

மனசோர்வு ,மன அழுத்தம் இவற்றை நீக்கும் காரணிகள் இதில் அதிகம் உண்டு .


கல்லீரல் ,மண்ணீரல் ,இரப்பை,குடல் இவற்றில் ஏற்படும் பலவினதால் உண்டாகும் நோய்களை களையும்,

உடல் உள் உறுப்புகளில் சேர்ந்துள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றி அவற்றுக்கு சத்தி அளித்து வலுப்படுத்தும்,

பூஞ்சை ,வைரஸ் இவற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது,
வைட்டமின் C குறைவால் உருவாகும் ஸ்கர்வி நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது,

இன்சுலினை சமநிலைபடுத்தும் கரணிகளை கொண்டுள்ளது,

நுரையீரளை பலப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்வதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது,(ஆஸ்துமா,சளி,இருமல்,கபம்,மற்றும் நெஞ்சில் பாரம் சேர்ந்துள்ளது போன்ற உணர்வை களையும்) மேலும் குறட்டை ,முறையற்ற சுவாசத்தை சீராக்கும்.

மூல நோயை கட்டுபடுத்தும் /வராமலும் தடுக்கும்.

இவ்வளவு சிறப்புகளை இந்த வில்வ பழம் கொண்டு இருந்தாலும் இதை சாப்பிட சில கட்டுப்பாடுகள் உள்ளது அவை,

1.வெறும் வயீற்றில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
2.ஒரு முறை 50 கிராம் வரை மட்டும் எடுக்கலாம்,அதிகப்படியாக எடுப்பது வயீற்று போக்கை உண்டாக்கும்.
3.கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும்,

பொதுவாக வில்வத்தின் பழம் ஒரு கால்பகுதி ,ஒரு கால் பகுதி பழத்தில் செய்த பழ சாறு,இலை என்றால் 5 எண்ணிக்கை,இலை சாறு எனில் 15 இலையை கொண்டு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அருந்தவும்,வில்வ இலை பொடி என்றால் 5 கிராம் எடுத்து ஒரு கிளாசு சூடு நீரில் கலந்து அருத்தலாம்.

ஒரு நாளைக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செய்யலாம்.மேல் கூறிய அனைத்து பலன்களும் கிடைக்கும்.




மேலும் விவரங்களுக்கு
1.Sathuragiri Herbal Research Center (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)
)
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்கள்,புகைப்படம்:shivayam54.blogspot
....................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக