இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஜூலை, 2016

ஓரிதழ் தாமரை காயகல்பம்:


ஓரிதழ் தாமரை,தொழுகண்ணி,விஷ்ணுகிரந்தி,கீழாநெல்லி ,மணதக்காளி கீரை,மகா வில்வம் ஆகிய மூலிகைகளை சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து ,தனித்தனியாக பொடித்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்.

காலை மாலை வெறும் வயிற்றில் ஐந்து கிராம் பொடியை 15 கிராம் தேன் கலந்து அருந்த வேண்டும் அல்லது 100 மில்லி பாலில் 5 கிராம் பொடியை கலந்து அதனுடன் பனை கல்கண்டு சேர்த்து அருந்த வேண்டும்.

உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியற்றி சகல உறுப்புகளையும்(வயிறு கல்லீரல்,கணையம்,சிறுநீரகம்,இனபெருக்க உறுப்புகள்) புதுபித்து நன்றாக இயங்க செய்யும்.உடலில் உள்ள உறுப்புகளின் கெட்ட கழிவுகளை வெளியற்றினாலே அதன் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.இது ஏறக்குறைய வாகனங்களை சர்விஸ் விடுவது போன்றதுதான்.

நான் சிறுவனாக இருக்கும் போது ,என்னுடைய ஆயா வருடத்தில் சில முறை கீழாநெல்லி கீரையை அரைத்து உருண்டையாக உருட்டி வாரத்தின் விடுமுறை நாட்களில் கொடுப்பார்கள்,வாசனையை பார்த்தாலே கசப்பாக இருக்கும்,வாந்தி வரும்,விழுங்கும் போதே வாந்தி வரமாதிரி ஏமாற்றி துப்பினால் ,அவர் கைவசம் இன்னும் சில உருண்டைகள் இருக்கும் அதை தந்து விழுங்க செய்வார் ,வயதுக்கு தகுந்தார் போல உருண்டையின் அளவும்,எடையும் மாறுபடும்,ஏதுக்கு ஆயான்னு கேட்டால்,மஞ்சள் காமாலை வராது ,வயித்து பூச்சி சாகும்,நல்லா பசி எடுக்கும்னு சொல்லுவாங்க(அது கல்லீரலையும், வயிற்றையும் சுத்தப்படுத்தி அங்குள்ள கழிவுகளை வெளியே ற்றும் வேலையை செய்கிறது).இந்த நிகழ்வு நம்மில் பலருக்கு நடந்த ஒன்றுதான்.



வயல் வேலைக்கு செல்லும் பெண்கள் மதிய உணவுக்கு தூக்கு என்ற பாத்திரத்தில் உணவு எடுத்து செல்வர்கள் திரும்பி வீட்டுக்கு வரும் போது சில காட்டு கீரைகளும் அதனோடு மணதக்காளி கீரை மற்றும் அதன் பழங்களை கொண்டு வருவர் ,பழங்களை காய வைத்து வற்றலாக செய்து குழம்பு வைப்பார்,கீரையை துவையளாகவோ,குழம்பாகவோ செய்வர் ,இது இனபெருக்க உறுப்பு,சிறுநீரகம்,கல்லீரல் போன்ற உறுப்புகளை பலப்படுத்தும்.


சிவாலயங்களில் தொன்று தொட்டு செய்துவரும் வில்வ இலை அபிசேகம்,நாம் அறிந்த ஒன்றுதான் அந்த வில்வ இலைக்கு நுரையீரல்,ரத்த ஓட்டம்,வயிறு,இனபெருக்க மண்டலம் ஆகியவற்றில் உள்ள கழிவுகளை அகற்றி பலப்படுத்தும் தன்மை கொண்டது.ஆனால் நம்மில் எத்தனை பேர் ,ஆலயத்தில் கொடுக்கும் வில்வத்தை சாப்பிடுகிறோம்,கண்ணகளில் ஒற்றி வைத்துவிடுகிறோம் .அடுத்த முறை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்,

ஒரிதழ் தாமரை இந்த மூலிகையின் சக்தி என்னவென்றால் எப்படிப்பட்ட தேறாத உடலையும் தேற வைக்கும்,விந்து நஷ்டத்தால் ஏற்ப்பட்ட உடல் நடுக்கம்,உடை எடை குறைவு,முதுகு வலி,கண்ணங்கள் ஒடுங்கி       காணப்படுவது,கண்ணு கீழ் கருவளையம்,உடல் சோர்வு போன்றவற்றை உடனடியாக நீக்கும்.பெண்களுக்கு இனபெருக்க மண்டலத்தை சுத்தபடுத்தும்.
        
விஷ்ணுகிரந்தி இந்த மூலிகையின் சக்தி என்னவென்றால் நரம்பு தளர்ச்சி அதித விந்து நஷ்டம்,உடல் சூடு மறதி அகியவற்றை நீக்கும்.
தொழுகண்ணி இது காய சித்தி மூலிகையாகும்,சித்தர்கள் உடம்பை காய சித்தி ஆக்க பயன்படுத்தினார்கள்.(நரை,திரை மூப்பு நீங்க).உடம்பை இறுக்கி பொலிவுற செய்கிறது...

நீங்க சொல்வது சரிதான் நீங்க கொடுத்த மூலிகைகளில் கீழா நெல்லி ,மணத்தக்காளி இரண்டையும் பார்த்து இருக்கோம்,ஓரிதழ் தாமரை பொடி, விஷ்ணுகிரந்தி நாட்டு மருந்து கடைகளில்,ஆனால் தொழுகண்ணி,மகா வில்வம் எங்கு கிடைக்கும் அப்புறம் எப்படி இதை செய்து சாப்பிடுவது.கிடைக்கும் மூலிகைகளை சம அளவு எடுத்து கலந்து வைத்து கொண்டு மேல் கூறியவாறு செய்யவும் நல்ல பலன் கிடைக்கும். 

நாங்கள் செய்து கொடுத்த இந்த கலவையை கல்யாணம் ஆனா குழந்தை இல்ல தம்பதிகளுக்கும் ,இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்யும், தம்பதிகளுக்கும் கொடுத்தோம்......

17 தம்பதிகளில் 6 தம்பதிகளுக்கு கரு உருவாகி உள்ளது,ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகி உள்ளது,
இந்த கலவை ஆண்களுக்கு 100%  உதவி செய்கிறது.பெண்களுக்கு 20% தான் உதவி புரிகிறது.இதனுடைய பயன்கள் 
ஆண்,பெண் இருவருக்கும் இனபெருக்க மண்டலத்தை சுத்தப்படுத்தி பலப்படுத்துகிறது,

இருவருக்கும் பசிஇன்மை,உடல் எடைகுறைவு,சோர்வு ,உடல் அசதி ஆகியவற்றை நீக்கி நன்கு சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

பெண்களை விட ஆண்களுக்கு 100% பலன் கிடைக்கிறது,அதாவது தேறாத உடலையும் தேற்றி ,கெட்ட கொழுப்புகளை அகற்றுகிறது மேலும் ,தரமான விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது,விந்தணுக்களை கட்டிப்படுதுகிறது ,உடல் சூட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருகிறது.  மேலும் விவரங்களுக்கு-----

மேலும் விவரங்களுக்கு----
1.Sathuragiri Herbal Research Center (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com