இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 அக்டோபர், 2014

கொம்புத்தேன்


கொம்புத்தேன்-தமிழ் நாடு முழுவதும் பார்சல் அனுப்படும் 
மலையில்,மிக உயர்ந்த மரங்களின் உச்சிக்கொம்பில் கூடுகட்டி தேனீக்கள் சேகரிக்கும் அரிய மூலிகைகள் கலந்த கலவைதான் கொம்பு தேன்  ,கூடு இருப்பதே தெரியாது,அப்படியும் தெரிந்தால் மரத்தின் உச்சிக்கு ஏறுவது மிகுந்த சிரமம்,ஏறினாலும் கொம்பு தேனை சேகரிப்பது கடினம்,இந்த சிரமதிற்கு இடையில் நமக்காக மலைவாழ் மக்கள் சேகரித்து தருகிறார்கள் .


நிறம் வெளிர் பச்சை ,அல்லது பச்சையும் மஞ்சளும் சேர்ந்த நிறத்தில் காணப்படும்.சுவை மிகவும் வித்தியாசமாகவும் ,அதிகமாகவும் இருக்கிறது.வாங்கி பயன் பெறுங்கள் .உங்கள் பகுதிகளில் கிடைத்தாலும் சோதித்து பின்பு,வாங்கி அதன் பயனை உணருங்கள், நண்பர்களே....................                     
              "வாதமொடு பித்தம் மாற்றும்
              மாந்தமெனும் நோயை விரட்டும்
             ஆறுதலென அரும்பசி ருசியூட்டும்
             ஆதலினால் இது கொம்புத்தேனே"
                                     என்கிறார் புலிப்பாணி சித்தர்.
இதற்கு பொருள், வாதம் என்ற நோயால் முகம் மட்டும் சிலருக்கு குளிர்காலத்தில் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும் வியாதி வரும். இதை கொம்பு தேன் தீர்க்கும். சிலருக்கு காசு உழைக்காமலே கொட்டோ கொட்டென்று கொட்டும். இவர்கள் வாய்க்கு ருசியாக சாப்பிட்டு விட்டு அப்படியே படுக்கையில் கிடப்பார்கள். இதற்கு மாந்தம் என்று பெயர். இந்த மாந்தத்தை விரட்டும். பல மனக்கோளாறு,உடல் கோளாறுகளால் பலருக்கு பசி என்பதே இருக்காது. இவர்களுக்கு பசியை வரவழைக்கும். நாக்கின் ருசியையும் அதிகப்படுத்தும்

நாங்கள் மலைவாழ் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் அவர்களுடன் காடுகளுக்குள் சென்று எங்களுக்கு தேவையான கொம்புதேன் மற்றும் மலைதேன்,  பிற பொருள்களையும் வாங்கிவந்து,மிகவும் குறைந்த விலையில் உங்களுக்கு கொம்பு தேன் மற்றும் மலைதேனை அளிக்கிறோம்.

முற்றிலும் நமது கண் பார்வையில் அவர்கள் தேனை எடுத்து நாம் கொண்டு சென்ற பாத்திரத்தில் தேனை ஊற்றி அளிக்கின்றனர்.

விற்பனையாகும் தேனின் வருமானம் முழுவதும் மலைவாழ் மக்களுக்கே சென்று சேரும்,ஆகையால் இதில் எந்தவித கலப்படமும் இல்லை என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.


(தற்போது நீங்கள் கடைகளில் வாங்கும் தேனில் 
தேன்-60% 
இரும்பு-20%
பாதுகாப்பான் பூச்சி கொல்லி -20%

என்ற அளவில் தான் இருக்கும் ,அமெரிக்க போன்ற நாடுகளில் 90 to 95% தேன் தான் இருக்கும்.அவர்களுடைய lable லில் மிகவும் சிறியதாக அச்சிட்டு இருப்பதை நீங்கள் காணலாம் ,சிலர் அச்சிடுவதிலை.)

கடைகளில் தேன் வாங்கும் போது lable-யை பாருங்கள் நண்பர்களே

கலப்படத் தேன்னை கண்டறியும் வழி முறைகள்
  • ஒரு நருள்ள கண்ணாடி டம்ளரில் சிறிதளவு தேனை ஊற்றும் பொழுது தேனானது உடனே கரையாமல் விழுது போல் டம்ளரின் அடியில் இறங்கினால் அது நல்ல தேன் அவ்வாறு ஊற்றும் பொழுது தேன் உடனே கரைந்து நீர் கலங்கினால் அது கலப்படத் தேன். தேனில் உள்ள நீர் அளவு கூடுதலாக இருந்தாலும் ஊற்றப்பட்ட தேன் டம்ளரின் அடியில் சென்று சேரும் முன்னரே கரையும்
  • சுத்தமான தேனைச் சாப்பிடும் பொழுது தொண்டையில் ஒருவிதமான கமறல் தோன்றும்
·         தேன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய சிறிதளவு தேனில், தீக்குச்சியை சில விநாடிகள் ஊற வைத்து துடைத்து தீப்பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரை கலப்படம் இல்லை என்பதை அறியலாம்.
·          அல்லது மை உறிஞ்சும் காகிதத்தில், செய்திதாளில் சிறிதளவு தேனை ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பேப்பர் தேனை உறிஞ்சாமல் இருந்தால் அது நல்ல தேன் என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • தேனுடன் சிறிதளவு நீர் சேர்க்கவும். பின்னர் நீர்த்த தேனுடன் சில துளிகள் அயோடின் கரைசலை (நீர் : அயோடின் 1:3) விடவும் தேன் தூயதாக இருந்தால் எவ்வித நிற மாற்றமும் ஏற்படாது. தேன் கலப்படத் தேனாக இருந்தால் சிறிது நேரம் கழித்து சிவப்பு அல்லது கத்திரிப்பூ நிறம் தோன்றும்

தேன் பற்றிய சில அரிய பயன்கள் வலைதளத்தில் இருந்து பெறப்பட்டது
மலையில் உள்ள மரம் செடிகளில் இருந்து சேரிக்கப்படும் தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு. பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் வெகு விரைவில் மருந்து உறிஞ்சப்பட்டு விடும். ரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல்படும்.

மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம். இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம் பழம் இரண்டையும் ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் குறையும். ஒரே டம்ளர் வெந்நீர் அல்லது சூடுபடுத்தப்பட்ட பாலில் மூன்று டீஸ் பூன் தேன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும். நோய் எதிர்ப்பு தன்மை பெருகி, உடல் ஆரோக்கியம் ஏற்படும். நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருகினால், ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.

தொடர்ந்து ஆறு வாரம் அருந்தினால் ரத்தத்தில் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை முற்றிலும் நீங்கி விடும். உடல் அழகையும், குரல் இனிமையையும் ஏற்படுத்தி தரும் குணம் தேனுக்கு உண்டு. வயிற் றுக்கு சிறந்த நன்பன் என்றால் அது தேன் தான். தினமும், 3 டீஸ்பூன் தேனை 100 மில்லி லிட்டர் வெந்நீரில் காலை அல்லது இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தினால், வயிற்றுப்புண், இரைப்பை அலர்ஜி, ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். குறிப்பாக அமிலத் தன்மையை கட்டுப்படுத்தி அல்சர் நோயை குணப்படுத்தும்.


மேலும் விவரங்களுக்கு




-----------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு 

சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
-----------------------------------------------------------------------------------------------
நன்றி :mylanchi.weebly வலைத்தளம்